தனிப்பட்ட மனிதரின் இறப்புக்காக அவர் குடும்பம் அழுவது என்பது இயல்பான விஷயம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் எங்கிலும் இருந்த தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதந்தார்கள் என்று கூறலாம்.
இதனை அடுத்து திரையுலகத்தில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், விஜயகாந்த் தொண்டர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எங்கெங்கோ இருந்தெல்லாம் வந்து கேப்டனுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் அந்த வரிசையில் வள்ளலாக வாழ்ந்த தர்மவான், கருப்பு எம்.ஜி.ஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் பலருக்கும் பல வகைகளில் தன்னலம் கருதாது நன்மைகளை செய்து வாழ வைத்த தெய்வமாக விளங்குகிறார்.
இவர் இறந்ததற்குப் பிறகு இவர் செய்த நன்மைகளைப் பற்றி ஒவ்வொரு திரை உலக பிரமுகர்களும் கூறும் போது இப்படிப்பட்ட மனிதரை இழந்து விட்டோமே, இனி மீண்டும் யார் நமக்கு இருக்கிறார் என்று தோன்றக்கூடிய அளவிற்கு இவரது நற்செயல்கள் கர்ணனுக்கு இணையாக இருந்தது.
இந்நிலையில் திரையுலகில் நாம் நடிக்க மாட்டோமா? நமக்கு என்று ஒரு இடம் கிடைக்காதா? என்று ஏங்கித் தவித்தவர், இவரின் சொந்த ஊரை சேர்ந்த வைகை புயல் வடிவேலு இன்று இந்த அளவு திரை உலகில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்திருக்கிறார்.
அவரை வளர்த்து விட்டது விஜயகாந்த் என்பதை மறந்து விட்டார். எனவே தான் மனிதத் தன்மை சிறிதும் இல்லாத வடிவேலு கேப்டன் விஜயகாந்த் மரணத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை.
ஏற்கனவே இவரோடு இணைந்து நடித்த பல கலைஞர்களின் இறப்புக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேல், கட்டாயம் அண்ணன் விஜயகாந்த் இறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தது போலவே நடந்து கொண்டார்.
நன்றி மறந்த நயவஞ்சக வடிவேலுவை பற்றி மீடியாக்கள் பல வகைகளில் பேசி வருகிறது அதோடு திரை உலக நண்பர்களும் அவரது உண்மை முகத்தை தோல் உரித்து காட்டிய நிலையில். விஜயகாந்துக்கு வடிவேலு செய்த துரோகங்களையும், கொடுமைகளையும் மன்னிக்கக் கூடாது என்று ரசிகர்கள் திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டார்கள்.
இதனை அடுத்து இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாத வடிவேலுவின் கொடுமையான மனிதத் தன்மையற்ற செயலை வன்மையாக கண்டித்து இனிமேல் மீம் டெம்ப்ளேட்டில் வடிவேலுவை பயன்படுத்த போவதில்லை என ரசிகர்கள் சபதம் எடுத்து உள்ளார்கள்.
விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது தன்னைப் பற்றி தவறாக பேசிய வடிவேலுவை போதும் அது பற்றி எந்த விதமான விமர்சனமும் செய்வதில்லை.