” புசுபுசுவென சாப்ட் கன்னம் , பளபளப்பான சருமம்..!” – எளிதில் பெற சில டிப்ஸ்..!

 பார்க்கும்போதே கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் அளவுக்கு புசுபுசுவென சாப்ட்டான கன்னமும் பளபளப்பான சருமமும் வேண்டுமென்றால் நீங்கள் கொடுக்கின்ற இந்த டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும் நீங்களும் ஹன்சிகா போல பளபளப்பாக விளங்கலாம்.

 சருமம் வறண்டு போகாமல் கரடு முரடான தோற்றங்களை உங்கள் முகத்துக்கு அளிக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்ற சிந்தனை உங்களுக்குள் இருக்கும். அப்படிப்பட்ட நீங்கள் பட்டுப்போல உங்கள் மேனியை மாற்றக்கூடிய இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள்.

டிபஸ் 1

 நீங்கள் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி வந்தால் எப்போதும் நீங்கள் அந்த மாய்சரைசரை தவிர்க்க வேண்டாம். ஈரப்பதத்தோடு உங்கள் சருமம் இருக்கும் போது தான் சருமத்தில் வறட்சியை ஏற்படாமல் இருக்கும். எனவே ஈரப்பதத்தை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள மாயசரைசரை பயன்படுத்துவது அவசியம்.

டிப்ஸ் 2

 உங்கள் சருமம் மிருதுவாக கன்னங்கள் புசுபுசுவாக இருக்க நீங்கள் ஹைலூரோனிக் ஆசிட், செராமைடு, வைட்டமின் ஈ, ஷியா வெண்ணெய் போன்ற பொருட்களால் செய்த தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் சருமம் மிருதுவாகும்.

டிப்ஸ் 3

தற்போது கோடை காலம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் நீங்கள் வெயிலில் செல்லும் போது யுவி கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க தக்க வழியை கையாள வேண்டும். இல்லையென்றால் யூவி கதிர்கள் உங்களது சரும ஈரப்பதத்தை உறுஞ்சி சருமத்திற்கு கேடுகளை விளைவிக்கும். எனவே சூடான தண்ணீரில் நீங்கள் குளிப்பதற்கு பதிலாக கோடைகாலங்களில் வெதுவெதுப்பான இளம் குளிர்ச்சியில் இருக்கக்கூடிய நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

டிப்ஸ் 4

 குளிர்காலத்தில் நீங்கள் மஞ்சி மற்றும் ஸ்க்ரப்பரை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சரும வறட்சியாக இருக்கும்போது இதுபோல செய்யும் போது மீண்டும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு பதிலாக நீங்கள் லேடிக் அசிட் ஹைட்ரேடிங்  ஏஜென்ட்களை பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 5

 உங்கள் உடலில் போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீரை நீங்கள் குடிக்க வேண்டும். இதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மென்மையாகவும் மாறும்.

டிப்ஸ் 6

 ஒமேகா த்ரீ கொழுப்பு அமிலம் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் 7

குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாவது சரும ஆரோக்கியத்திற்காக சில ஒர்க் அவுட்டுகளை நீங்கள் செய்வதின் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தோல் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள உதவக்கூடிய கொலாஜன் உற்பத்தியை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

டிப்ஸ் 8

இரவு நேரம் படுக்கைக்கு சென்று உறங்கும் முன் நீங்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் இரவு முழுவதும் சருமம் பாதுகாப்பாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் அமைத்துக் கொடுக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …