இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..?

விருமாண்டி அபிராமி என தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பெயர் எடுத்து வைத்திருப்பவர் நடிகை அபிராமி.

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

விருமாண்டி அபிராமி:

தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் வானவில் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..

தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். 1995இல் மலையாளத்தில் வெளிவந்த கதா புருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999இல் சிரோஷியோவின் நடிப்பில் மூலம் வெளிவந்த பத்திரம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அபிராமிக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது.

கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் தொடர்ந்து நடித்துவந்த அபிராமி தமிழில் வானவில் படத்தின் மூலம் ஹீரோயினாக தான் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்..

தமிழில் தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் கமல்ஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்ததால் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பீல்டு அவுட் ஆன அபிராமி:

தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காதால் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட அபிராமி கடந்து 2009 ஆம் ஆண்டு ராகுல் பவணனை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் ஆனாலும் அவரை இன்னும் மக்கள் மறந்த பாடு இல்லை.

பல வருடங்களுக்கு பிறகு 36 வயதிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அபிராமி தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்தும் வருகிறார்.

தற்போது அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கடைசியாக லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஆர் யூ ஓகே பேபி படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய்யுடன் நடிக்க ஆசை:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி, எனக்கு நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏன் என்றால், என் கணவர் ராகுல் விஜய் போலவே இருப்பார்.

அவரை ஹீரோவாக்க முடியாது என்பதால், விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியைப்பார்த்த விஜய் பேன்ஸ், அவரே அரசியலுக்கு வந்து விட்டார். இனிமேல் வாய்ப்பு இல்ல மேடம் என்று கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version