“எதிலும் வெற்றி பெற வேண்டுமா”? – அப்ப வெற்றிலை மாலையை ஹனுமான் சாமிக்கு போடுங்க..!

ஜெய் ஹனுமான் ஜெய் வீர ஹனுமான் என்று சொல்லப்படக்கூடிய வசனங்களுக்கு ஏற்ப உங்கள் காரியத்தில் எதையும் நீங்கள் தங்கு தடை இல்லாமல் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு ஸ்ரீ ஹனுமானை வழிபடுவதோடு அவருக்கு பிடித்த சனிக்கிழமையன்று வெற்றிலை மாலை சாத்துவதின் மூலம் எந்த காரியத்திலும் நீங்கள் வெற்றி பெற முடியும்.

சிரஞ்சீவி ஸ்ரீ ஹனுமானின் அருள் இருந்தால் எந்த காரியத்தையும் உங்களால் எளிதில் சாதிக்க முடியும். சனிக்கிழமை அன்று நீங்கள் உங்கள் வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து அனுமான் படம் இருந்தால் அந்தப் படத்திற்கு வெற்றிலையில் மாலை கட்டி சாத்த வேண்டும்.

 இதனை தொடர்ந்து ஒரு மண்டலம் நீங்கள் செய்யும் போது நீங்கள் எடுத்த காரியம் வெற்றி அடையும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் கோயில்களிலும் சனிக்கிழமை தோறும் சென்று அனுமனை தரிசிப்பதோடு சனிக்கிழமை அன்று ஹனுமான்னுக்காக விரதம் இருந்து இந்த வெற்றிலை மாலையை சாற்றுவதன் மூலம் உங்கள் காரியம் சித்தியாகும்.

வெற்றிலை மாலை கட்டும்போது வெறும் வெற்றிலையை தான் நீங்கள் கட்ட வேண்டும் அதோடு பார்க்கினை இணைத்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல காம்பு இருக்கும் வெற்றிலையைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். காம்பு இல்லாத வெற்றிலையில் நீங்கள் மாலை கட்டுவதை தவிர்க்க விடுங்கள்.

நெய் விளக்கு ஏற்றி அனுமன் சைலஜா, ஹனுமன் வரலாறு போன்றவற்றை நீங்கள் உங்கள் வீட்டிலேயே விரதம் இருந்து படிப்பதின் மூலம் உங்களுக்கு சனி கிரகத்தின் தாக்கம் இருந்தால் அதன் தாக்கம் சற்று குறையும். அது மட்டுமல்லாமல் பெருமாளின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

அளப்பரிய ஆற்றல் படைத்த ஸ்ரீ ஹனுமான் சிரஞ்சீவி ஆக வாழ்ந்தவர். அதுமட்டுமல்லாமல் ராமனுக்கு உதவியதின் காரணத்தால் ராம தூதர் என்ற பெயர் பெற்றவர். எனவே காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் சனிக்கிழமை விரதம் இருந்து அனுமாருக்கு வெற்றிலை மாலையை சூடிப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் திருப்பம் ஏற்படும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …