ஒளிமயமான வாழ்க்கைக்கு சம்பாதிக்கும் பணத்தை திட்டம் போட்டு செலவு செய்ய பழகிக் கொள்ளுங்க..!!

காசேதான் கடவுளடா கடவுளுக்கும் அது தெரியுமடா என்ற பாடல் வரிகளை நீங்கள் நன்றாக கேட்டிருந்தால் அதன் உண்மை புரியும். நிச்சயமாக இன்று பணம் இருக்கும் மனிதர்களைத்தான் அனைவரும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீர்கள். அந்த பணத்தை திட்டமிட்டு செலவு செய்து வைக்கக்கூடிய பழக்கம் இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை, நாளைய உங்களுடைய ரிடைட்மென்ட் காலத்தில் கிடைக்கும்.

நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் சரி, ஆயிரங்களிலும் சம்பாதித்தாலும் சரி, உங்களிடம் சேமிப்பு பழக்கம் இருந்தால் மட்டும்தான் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும். எவ்வளவு பணம் வந்தாலும் அதை திட்டம் இல்லாமல் அப்படியே காலி செய்தால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

எனவே மாதா மாதம் இதற்கு, இதற்கு என்று நீங்கள் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் சேமிப்புக்கு என்று ஒரு தொகையை ஒதுக்குவதின் மூலம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பேணிப் பாதுகாக்கப்படும்.

உங்கள் பட்ஜெட்டுக்குள் செலவுகளை அடக்க வேண்டுமே ஒழிய அதை மீறி கடன் வாங்கி செலவு செய்யலாம் என்று அசால்டாக நீங்கள் கடன் வாங்க ஆரம்பித்தால் அந்த கடன் சுமை உங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடிக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

எனவே உங்கள் வருமானம் எவ்வளவு உங்களின் மனைவியின் வருமானம் எவ்வளவு ஆக மொத்தம் உங்கள் மொத்த வருமானத்தையும் உங்கள் பிள்ளைகளின் முன் அமர்ந்து நீங்கள் பட்ஜெட் போடும்போது குழந்தைகளுக்கு உங்களது வருமானம் மற்றும் வீட்டில் நடக்கக்கூடிய செலவுகள் தெரிவதால் அவர்கள் அந்த செலவுகளை கருத்தில் கொண்டு அதிகமாக எதையும் விரும்பி கேட்க மாட்டார்கள்.

மேலும் அவர்களுக்கு வீட்டின் நிதி நிலைமை தெரிவதால் அதற்கு கேட்பது போல் நடந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிடும். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் நிதியை எப்படியெல்லாம் சமாளிக்க முடியும் என்பதை பற்றி அறிந்து கொள்ள இளம் வயதிலேயே அவர்களுக்கு நாம் ஒரு வாய்ப்பை கொடுப்பதாக அமையும்.

எனவே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். அவசியம் என்றால் அந்த இடத்தில் கட்டாயம் எவ்வளவு வேண்டுமென்றாலும் செய்யலாம். சுருக்கி பிடிக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் சுருக்கி பிடியுங்கள். வளமான எதிர்காலத்தை உங்கள் குடும்பத்திற்கு இதன் மூலம் நீங்கள் அமைத்துக் கொடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …