“பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊரும் பொரிச்ச பூண்டு தொக்கு..! – இப்படி செய்து பாருங்க..!

 நீங்கள் எந்த பொரிச்ச பூண்டு தொக்கை பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும். இதனை நீங்கள் உங்கள் சப்பாத்தி தோசைக்கு மட்டுமல்லாமல் தயிர் சாதத்திற்கும் தொட்டு சாப்பிடும் போது யம்மி யம்மி டேஸ்டில் உள்ளது என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டும் வேண்டும் என்று விரும்பி கேட்டு தின்பார்கள்.

 அப்படிப்பட்ட இந்த  பூண்டு தொக்கினை எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 பொரிச்ச பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

1.அரை கிலோ பூண்டு நன்றாக தோல் உரித்தது

2.பூண்டினை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

மசாலா செய்வதற்கு

3.கடுகு 25 கி

4.வெந்தயம் 10 கி

 தாளிக்க

5.கடுகு

6.உளுத்தம் பருப்பு

7.பெருங்காயம்

8.கருவேப்பிலை

9.உப்பு தேவையான அளவு

10.புளி கரைசல் 50 மில்லி

செய்முறை

முதலில் நீங்கள் உரித்து வைத்திருக்கும் அரை கிலோ பூண்டினை நன்கு கழுவி விட்டு சிறிது நேரம் உலர்த்தி விடுங்கள். இதனை அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஸ்விம்மில் போட்டு எண்ணெயை ஊற்றவும்.

 இந்த எண்ணெய் காய்ந்த உடன் அதில் பூண்டினை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.

இதனை அடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் கடுகு, வெந்தயம் இவை இரண்டையும்  போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 கடுகு மற்றும் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனை அடுத்து நீங்கள் பொறித்து வைத்திருக்கக்கூடிய பூண்டினை அதே ஜாரில் போட்டு இரண்டு ஓட்டு ஓட்டு விடுங்கள். மைய மசிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 இப்போது அரைத்த இந்த பூண்டு விழுதை தனியாக எடுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு போன்றவற்றை போட்டு வெடிக்க விடவும்.

 இவை வெடித்து வரக்கூடிய நிலையில் நீங்கள் கருவேப்பிலையை சேர்த்து விடுங்கள். பின்னர் இதோடு நீங்கள் அரைத்து வைத்திருக்கும் பூண்டு தொக்கை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதனை கிளறியதை அடுத்து நீங்கள் இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூளை போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் புளி கரைசலை கரைத்து அதில் ஊற்றவும். இந்தக் கலவை நன்கு கொதித்து வரக்கூடிய சமயத்தில் பொடித்து வைத்திருக்கும் கடுகு, வெந்தயத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.

 மீண்டும் அடுப்பை ஸ்விம்மில் வைத்து நன்கு  சுருண்டு வரும் வரை இறக்கி விடவும். இப்போது இது நன்கு சுருண்டு வருவதோடு உள்ளிருக்கும் எண்ணெய் அப்படியே வெளியே உதித்து வெளிவரும்.

இந்த சமயத்தில் நீங்கள் அடுப்பில் இருந்து அதனை இறக்கி விடலாம். அருமையான இந்த பூண்டு தொக்கினை நீங்கள் எதில் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். பத்து நாள் இருந்தாலும் இந்த தொக்கு கெட்டுப் போகாது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …