நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சியுடன் பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது. சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் படப்படிப்பு நடத்தப்பட்டது.
இம்மாதம் 23ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதிகளில் கோட் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. தொடர்ந்து ஒருவார இடைவேளைக்கு பிறகு, படக்குழு ராஜஸ்தான் புறப்பட்டுச் செல்கிறது. அதன்பிறகு இலங்கை செல்லும் படக்குழு, இஸ்தான்புல்லில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடவும். அதற்கு பிறகு தேவைப்பட்டால் ஏப்ரல் முதல் வாரத்தில் விடுபட்ட காட்சிகளை எடுத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. இப்போது சென்னை கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர பங்களாவில் கோட் ஷூட்டிங் நடந்து வருகிறது.
உல்லாச கேளிக்கை மையமான இந்த பகுதியில் எப்போதும் உற்சாகம், கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் ஷூட்டிங் எடுப்பதையே பார்ட்டி நடப்பது போல மாற்றிவிடும் வெங்கட்பிரபுவுடன் சேர்ந்தால், யாரும் அந்த கேளிக்கைகளில் ஆர்வம் காட்டி அதற்கு மனதை பறிகொடுத்து விடுவர்.
அந்த வகையில் நடிகர் விஜய் இப்போது, 20 நிமிடம் காரில் பயணித்தால் சென்றுவிடும் தூரத்தில் உள்ள தனது நீலாங்கரை பங்களாவுக்கு செல்வதே இல்லை. இயக்குநர் வெங்கட்பிரபு படக்குழுவுடன் அங்கேயே பகல் இரவு என ஸ்டே செய்து விடுகிறார். எந்நேரமும் அவர் அந்த கூட்டத்தில் ஒருவராக மாறி, அங்கேயே ஐக்கியமாகி விட்டார் என்றும் தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு தலைவராக வேண்டிய சிறந்த மனிதர், இப்படி மாறி விட்டாரே, மாற்றி விட்டார்களே என்று அங்குள்ள சிலர் புலம்புகின்றனர்.