ரச்சிதா மகாலட்சுமி : பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடக்கக்கூடிய முக்கியமான விறுவிறுப்பான சம்பவங்கள் குறித்த தகவலை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பிக்பாஸ் ஆரம்பமான இரண்டாம் நாள் தொட்டு பொது மக்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் தனலட்சுமி என்ற போட்டியாளருக்கும் டிக் டாக் பிரபலம் தலைவர் ஜி பி முத்து இருவருக்கும் வாய்க்கால் சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது.
வடிவேலு பாணியில் என்ன கைய புடிச்சு இழுத்தியா..? என்ற உப்புச்சப்பில்லாத பிரச்சனைகளுக்குபிக் பாஸ் போட்டியாளர் தனலட்சுமி ஜி.பி.முத்துவிடம் கோபமாக எகிரி கொண்டிருக்கிறார். இது பிக்பாஸ் பார்வையாளர்களை கடுமையான கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மட்டுமல்லாமல் ஜிபி முத்துவிற்கு ஆதரவாளர்களையும் சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஜி.பி.முத்து சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயங்களை கூட தனலட்சுமி கோபித்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் சண்டைக்கு சொல்கிறார். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறுகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
இப்படி சண்டையும் சல்லுமாக போய்க் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமிக்கு சீரியல் நடிகை ரச்சிதா மாகலட்சுமி ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அவருடைய வயதுக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அவர் மிகவும் வெகுளித்தனமாக நடந்து கொள்கிறார். அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அவருடைய இயல்பே அதுதான் .அவரை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும். அவர் உனக்கு அப்பா போன்றவர். வயதின் அடிப்படையில் உனக்கு அப்பா போன்றவர். அவரிடம் நீ இப்படி சிறு சிறு விஷயங்களுக்கு கோபப்படுவது சரியாகப்படவில்லை. நீ கோபப்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மட்டுமில்லாமல் சக பிக் பாஸ் போட்டியாளர் ஜனனியும் ஜிபி முத்துவின் மனநிலையை அறிந்தவராக அனைவரது முன்னிலையிலும் தனலட்சுமியிடம் பேசினார். அப்பொழுது, ஜி பி முத்து எகிறி கொண்டு வந்ததாக நீ கூறுகிறாய். ஆனால் நீ அதற்காக திருப்பி பேசிய விதம் தவறு. வயதுக்கு இங்கே நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.
நான் அவரிடம் சண்டை போடாதே என்று கூறினால், நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன் அப்படித்தான் சண்டை போடுவேன் என்று கூறுகிறாய் ஆனால் பிக்பாஸ் வீடு என்றால் சண்டை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோரும் உறவுகள் போல அண்ணன், அப்பா, அக்கா போல ஒரு வீடு மாதிரி தான்.
இங்கே அனைவருக்கும் வயதுக்கேற்றார் போல மரியாதை கொடுக்க வேண்டும். அனைவரையும் ஒரே நிலையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கிறது. ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அந்த தன்மையுடன் அவர்களை நாம் மதிக்க வேண்டும்.
இங்கே எல்லோருமே போட்டியாளர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் அதற்குள் ஒரு நேர்மை வேண்டும். மரியாதை வேண்டும் வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் பலருக்கு அப்பா போன்றவர் தயவுசெய்து கோபப்படாமல் இதனை புரிந்து கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
இப்படி பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே மட்டும் இல்லாமல் ஜி பி முத்து-விற்கு பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயுமே நல்ல ஆதரவு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் என்ன நடக்க போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.