என்னால் பாடியை இப்படி பண்ண முடியாது..? என் பள்ளியில் எல்லாருமே அப்படி பாத்தாங்க..! உடைத்து பேசிய கேப்ரில்லா..!

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தவர் தான் கேபிரில்லா சார்ல்டன்.

இவர் முதன் முதலில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் நடித்து நடிகையாக தடம் பதித்தார்.

குழந்தை நட்சத்திரமாக கேபிரில்லா:

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து அப்பா , சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் கேபிரில்லா நடித்திருக்கிறார் .

இவர் முன்னதாக நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் சிறு வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோகளில் நடனமாடி வெற்றியை குவித்திருக்கிறார்.

இதனிடையே அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

அந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ச்சியாக அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

சீரியலில் கேபிரில்லா:

இதனிடையே ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயின் ஆக நடித்து எல்லோரது கவனத்தை ஈர்த்தவராக இருந்து வருகிறார் .

இந்த சீரியலில் ஹோம்லி ஆன மனைவியாக அவர் நடித்து. ஒட்டுமொத்த இல்லத்தரிசிகளின் மனதையும் கவர்ந்து விட்டார் .

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு வருவார் .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். அப்போது பாடி ஷேமிங் பற்றி தனக்கு நடந்த மிக மோசமான அனுபவம் ஒன்றை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பாடி ஷேமிங் குறித்து தனக்கு வந்த கிண்டல்கள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் கேப்ரில்லா. என்னுடைய உடம்பை என்னால் மாற்றவே முடியாது .

பாடி ஷேமிங் குறித்து கேபி:

ஒல்லியாக இருந்தாலும்… குண்டாக இருந்தாலும் விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

ஒல்லியாக இருந்தால் ஏன் ஒல்லியா இருக்குற? என்று கேட்கிறார்கள். குண்டாகிவிட்டால் ஏன் இப்படி குண்டாக அசிங்கமா இருக்குற? என கேட்டு ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு உடலை குறைக்கனும் என்று அட்வைஸ் பண்ணுவாங்க.

அதனால் நாம் அதைப் பற்றி கவலையே படக்கூடாது. நான் பத்தாவது படிக்கும்போது என்னுடைய அப்பா எனக்கு ஒரு ஆடை வாங்கி கொடுத்தார்.

அந்த ஆடை ரொம்ப குட்டியாக தான் இருக்கும். அப்போது சிறு வயது அது ஒன்னும் பெருசா கவர்ச்சியாகவோ கிளாமராகவோ தெரியப்போவதில்லை.

10ம் வகுப்பு படிக்கும்போதே என் அப்பா:

ஆனால் அதை ஆபாசமாக சித்தரித்து உனக்கு உன்னுடைய அப்பாவே இது போன்ற டிரெஸ் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்களா? என்றெல்லாம் விமர்சித்து தள்ளியிருந்தார்கள்.

அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. இதனால் நான் பத்தாவது படிக்கும்போதே என்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டு ஆபாசமாக சித்தரித்து எனக்கு மன உளைச்சலை கொடுத்தார்கள்.

அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை… ஆனால் என்னை மாதிரி அப்பட்டமாக சித்தரித்து வைத்திருந்தார்கள் .

எனக்கே ஒரு டவுட் வந்து விட்டது. ஒரு வேலை நானா இருக்குமோ? என்று எனக்கே தோன்றும் அளவுக்கு அந்த போட்டோவை எடிட் செய்து என்னை மோசமாக விமர்சித்தார்கள்.

நாள் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன். என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை கேவலமாக பார்த்தார்கள்.

நான் பள்ளிக்கு சென்றாலே என்னை மேலும் கீழுமாக நான் ஆடையே போடாதவள் போல் என்னை உற்று உற்றுப் பார்ப்பார்கள்.

இதனால் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நான் ஸ்கூலுக்கே போகவில்லை. அந்த ஒரு சம்பவத்தால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்.

பள்ளியில் ஆபாசமாக என்னை பார்த்தார்கள்:

வீட்டில் வந்ததும் கதறி அழுது கொண்டிருப்பேன் என பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு பேசிய கேபிரில்லாவின் அம்மா….என்னுடைய மகளின் அந்த மார்பின் புகைப்படம் பல பேரிடமிருந்து குறுஞ்செய்தியாக எனக்கு வந்து கொண்டிருந்தது .

அதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சையாகிவிட்டது. நான் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகி பயங்கரமாக ரியாக்ட் செய்தேன்.

ஆனால் என்னுடைய கணவர் அப்படியே எங்களுக்கு ஆப்போசிட்டானவர். ரொம்பவும் கூலா அத பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க….

இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல தூக்கிப்போட்டு அடுத்த வேலையை பாருங்க… என செம கூலாக சொல்லிவிட்டார்.

எங்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என அவர் கூறியிருக்கிறார் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version