அடிக்கடி இதை பண்ணாதிங்க.. உடம்புக்கு ஏதாவது ஆகிடும்.. ரசிகரின் கமெண்ட்.. கேப்ரில்லா பதிலடி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் நடிகை கேப்ரிலா முக்கியமானவர். சின்ன வயது முதலே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது உலக அளவில் உள்ள தமிழர்கள் மத்தியில் கேப்ரில்லாவிற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகமாக ஒவ்வொரு வாரமும் ஓட்டு பெற்று வந்த நபராகவும் இருந்து வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக கடைசி சில வாரங்களில் அவர் பிக் பாஸ் போட்டியிலிருந்து விலக வேண்டி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கேப்ரில்லாவிற்கு வரவேற்பு என்பது அதிகரித்து இருந்தது. அதனால் விஜய் டிவியில் அவர்கள் நடத்தும் நிறைய நிகழ்ச்சிகளில் கேபிரில்லாவை பங்கு பெற வைத்தனர்.

சீரியலுக்கு வந்த கேப்ரில்லா:

அதனை தொடர்ந்து அடுத்து சினிமாவில்தான் இவர் நடிக்க போகிறார் என்று அவரது ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் சினிமாவில் எல்லாம் நடிக்கவில்லை ,அடுத்து சீரியலில்தான் நடிக்க போகிறேன் என்று கேப்ரில்லா கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் பெரும்பாலும் சீரியலுக்கு செல்லும் நடிகைகளுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது அரிதாகி விடுகிறது. இருந்தாலும் சீரியலில் வாய்ப்பை பெற்று அங்கு சென்று நடிக்க தொடங்கினார் கேப்ரில்லா. இதற்கு நடுவே அவர் விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் ஆஜித் உடன் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆஜித்துடன் சேர்ந்து நடனமும் ஆடியிருந்தால் இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக அப்பொழுது பேச்சுக்களும் இருந்து வந்தன. இவற்றையெல்லாம் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் காவியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரசிகர் கேட்ட கேள்வி:

இந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் இந்த சீரியலில் காவி கதாபாத்திரம் எப்பொழுதுமே கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கும் கதாபாத்திரமாக இருந்தது. இதனால் தொடர்ந்து கிளிசரின் எதுவுமே பயன்படுத்தாமல் இயற்கையாகவே கண்ணீரை வரவைத்து அழுது நடித்துக் கொண்டிருந்தார் கேப்ரில்லா.

இது அவரது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப்ரில்லாவின் ரசிகர்கள் கொஞ்சமாவது பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரி கடின உழைப்பு உடலை பாதித்துவிடும் என்று கூறியிருக்கின்றனர்.

அதற்கு பதில் அளித்த கேபிரில்லா முதலில் சீரியலில் நடிப்பது என்னுடைய வேலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது எனது உடல் நிலையை பாதித்தாலும் கதைக்கு தேவைப்படுவதால் வேறு வழியில்லை. நான் நடித்துதான் ஆக வேண்டும் நான் செய்யும் வேலைக்கு உங்களிடம் அங்கீகாரமும் அக்கறையும் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version