எனக்கும் மாளவிகாவுக்கும் தொடர்பு இருக்குன்னு!.. வாய் திறந்த நடிகர் கானா உலகநாதன்!.

தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து அதை திரைப்படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். பெரும்பாலும் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்கள் சண்டை காட்சிகள் கொண்ட படங்களைதான் திரைப்படமாக பார்ப்பார்கள்.

இல்லையென்றால் காதல் கதைகளை கொண்ட படங்களை திரைப்படம் ஆக்குவார்கள். ஆனால் மிஷ்கினை பொருத்தவரை அவள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும் வேறாக இருக்கும். அதிகபட்சம் க்ரைம் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதை பார்க்க முடியும்.

இயக்குனர் மிஷ்கின்:

ஆனால் அவற்றை திரைக்கதை ஆக்குவதில் நிறைய வித்தியாசமான விஷயங்களை செய்திருப்பார் மிஷ்கின். இதனாலேயே மிஸ்கின் திரைப்படங்கள் தனித்துவமான திரைப்படமாக இருந்து வருகிறது. மிஷ்கினின் முதல் திரைப்படம் சித்திரம் பேசுதடி திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை மிஷ்கின் இயக்கும்பொழுது அதில் நிறைய புது விஷயங்களை செய்திருப்பார்.

அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற படமாகவும் இருந்தது. மஞ்சள் புடவையை கட்டிக்கொண்டு பெரிதாக கவர்ச்சி இல்லாமல் ஐட்டம் பாடல்களை செய்யலாம் என்பதையும் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் மிஷ்கின்தான். அப்படியாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் அவர் வைத்த வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் என்கிற பாடல் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது.

மாளவிகாவுக்கும் தொடர்பு இருக்குன்னு

அந்த பாடல் உருவான அனுபவம் குறித்து பிரபல பாடகரான கானா உலகநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் பாடலை பாடுபவராக கானா உலகநாதன்தான் படத்தில் வருவார்.

உண்மையாகவே அவர்தான் அந்த பாடலை பாடி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேட்டியில் பேசிய அவர் கூறும் பொழுது முதலில் அந்த படத்தில் பாடல் பாடுவதற்குதான் என்னை அழைத்தார்கள். ஆனால் படத்தில் வந்து நான் பாடி காட்டிய பொழுது நீங்கள் பாடும் ஆக்ஷன் நன்றாக இருக்கிறது.

படத்திலும் நீங்களே பாடி விடுங்கள் என்று கூறி என்னை நடிக்க வைத்து விட்டார் மிஷ்கின். அதற்கு பிறகு எனக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் அந்தன. வெளிநாடு வரை சென்று நான் நிறைய பாடல்களை பாடி சம்பாதித்தேன்.

நடிகர் கானா உலகநாதன்

சென்னையில் சொந்தமாக ஒரு வீடும் கட்டி விட்டேன் என்று கூறியிருக்கிறார் கானா உலகநாதன். இந்த நிலையில் அப்போது வந்த கிசுகிசுக்கள் குறித்து அவர் கூறியிருக்கிறார். வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் பாடல் உருவான சமயத்தில் மாளவிகா என்னிடம் மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். என்னை எப்பொழுதும் அவர் கலாய்த்து கொண்டே இருப்பார்.

ஆனால் நான் அவரை கலாய்க்க மாட்டேன் இந்த நிலையில் தினகரன் நாளிதழில் ஒரு நாள் என்னை பற்றியும் மாளவிகா பற்றியும் கிசுகிசு ஒன்று வெளியானது. நானும் அவரும் தொடர்பில் இருப்பதாகவும் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும் அதில் எழுதப்பட்டிருந்தது.

இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் தினகரன் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து கேட்டேன். ஆனால் அவர்கள் எங்க பொழப்பு இப்படி போட்டாதான் சார் ஓடும் என்று கூறினார்கள். நானும் அதனால் விட்டுவிட்டேன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் கானா உலகநாதன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam