வைரமுத்து மனுஷனே கிடையாது.. எங்களால் வளர்ந்த.. வாயை மூடிகிட்டு இரு.. பொங்கிய தம்பி..!

தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மிகச் சிறந்த பாடலாசிரியராக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

1980ல் வெளியான பொன்மாலைப்பொழுது எனும் பாடலை முதன் முதலில் எழுதி இயக்கியதன் மூலம் இவர் பாடலாசிரியராக அறிமுகமானார்.

பாடலாசிரியர் வைரமுத்து:

பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்து கிட்டத்தட்ட 5800 பாடல்களுக்கு மேல் பாடல் வரிகள் எழுதி பெரும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி பல விருதுகளையும் குவித்திருக்கிறார் .

மிகச்சிறந்த பாடலாசிரியராக இருப்பதற்கு ஈடாக பெரும் சர்ச்சைகளை சிக்கி விமர்சிக்கப்படும் பாடல் ஆசிரியராகவும் வைரமுத்து பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக பாடகி சின்மயிக்கு பாலியல் ரீதியாக பெரும் தொல்லை கொடுத்ததாக அவர் பொதுவெளியில் வந்து பலமுறை பேசியிருக்கிறார்.

பாலியல் சர்ச்சையில் வைரமுத்து:

இதனால் வைரமுத்து மீதான மக்கள் பார்வையே வேறு மாதிரி இருக்கிறது. இப்படியான நேரத்தில் வைரமுத்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதாவது வைரமுத்துவுக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே பெரும் மோதல் இருந்து வருகிறது.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த சில வருடங்களாக படங்களில் சேர்ந்து பணியாற்றாமல் இருந்து வருகிறார்கள்.

இப்படியான நேரத்தில் இளையராஜா வைரமுத்துவை தாக்கும் விதத்தில் தனது இசை தான் பெரியது. இசை இல்லை என்றால் பாடல் ஒன்றுமே இல்லை.

எனவே இசையை உருவாக்கியவருக்கு தான் முழு பாடலும் சொந்தம் எனவே என்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்… உங்களைப் போன்றே பாடல் ஆசிரியர்களும் பாடலுக்கும் பாடல்களும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது?என்ற கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இதையடுத்து வைரமுத்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், பாடல் பெரியதா? இசை பெரியதா? என கேள்வி கேட்டு இளையராஜாவை மறைமுகமாக தாக்கியிருந்தார்.

வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு கடுங்கோபத்துடன் பதில் அளித்திருகிறார் பிரபல இசையமைப்பளரும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன்.

வைரமுத்துவுக்கு நாங்க பிச்சை போட்டோம்:

அது குறித்து அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ” வைரமுத்து இந்த அளவுக்கு உயர்ந்ததுக்கு காரணமே நாங்க போட்ட பிச்சை தான்.

இன்று அவர் வளர்ந்துவிட்டார் என்பதற்காக என்ன வேணாலும் பேசி தன் இஷ்டத்துக்கும் ஆடக்கூடாது. இளையராஜா சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் இன்று வைரமுத்து ஒரு ஆளாகவே இருந்திருக்க மாட்டார்.

வைரமுத்துவிடம் என் அண்ணன் இளையராஜா… “இந்தாப்பா என்று ஒரு நிலத்தை கொடுத்து வச்சுக்கோ அப்படின்னு கொடுத்ததை ஆண்டு அனுபவித்துவிட்டு பின்னர் அது நிலம் என்னால்தான் உருவானது என மடத்தனமாக கூறுவது போல் இருக்கிறது வைரமுத்துவின் கருத்து.

வைரமுத்து மனுஷனே கிடையாது:

வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால், அவர் நல்ல மனிதரே கிடையாது. நன்றி கெட்டவன். அப்படி இருந்ததால்தான் இளையராஜா பற்றி இன்று தவறாக பேசியிருக்கிறார்.

இல்லையென்றால் பாடல் பெரிதா? இசை பெரிதா? என்று அவர் கேட்டிருக்க மாட்டார். “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடலுக்கு இளையராஜா டியூன் போட்டுக் கொடுத்ததால் தான் அந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் த அடித்து வைரமுத்துவுக்கு ஒரு அறிமுகத்தையே கொடுத்தது.

இளையராஜா அன்று அவரது பாடலுக்கு டியூன் போடவில்லை என்றால் சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் இன்று இந்த வைரமுத்து யார் என்று அடையாளமே தெரியாமல் போயிருப்பார்.

வைரமுத்துவால் தான் இளையராஜா வளர்ந்து விட்டு இன்று அவரையே எதிர்த்து மறைமுகமாக இப்படி பேசுகிறார். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இனிமேல் வைரமுத்து வாய் திறந்தால் நடப்பதே வேறு என மிரட்டும் தொனியில் கடும் கோபத்தோடு பேசி இருக்கிறார் கங்கை அமரன்.

மட்டுமில்லாமல் இளையராஜா எப்படி இசையமைக்கும் தொழிலை செய்து வருகிறாரோ அதேபோல் நீங்களும் உங்கள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கூட்டம் போட்டு கூவி கூவி விற்பனை செய்யுங்கள்.

இல்லை எனில் செல்லும் விழாக்களுக்கு எல்லாம் என்னுடைய புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கினால்தான் நான் விழாவிற்கு வருவேன் என கட்டளையிடுங்கள்.. என்னமோ செய்து கொள்ளுங்கள் எப்படியோ பிழைப்பு நடத்துங்கள்.

வைரமுத்து போட்டோவுக்கு கும்பிடு போடு:

ஆனால் இனி ஒரு வார்த்தை என் அண்ணன் இளையராஜா பற்றி தவறாக உங்கள் நாவில் இருந்து வரவே கூடாது. அவருக்கு தம்பி நான் இருக்கிறேன் என காட்டமாக கூறியுள்ளார்.

பாரதிராஜாவும் இளையராஜாவும் தான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தார்கள். தினமும் நீங்கள் இளையராஜாவின் படத்தை வைத்து கும்பிடு போட வேண்டும் என கங்கை அமரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

என்னுடைய இந்த கருத்துக்கு வைரமுத்து பதில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஆனால் இனி ஒரு வார்த்தை இளையராஜாவுக்கு எதிராக பேசக்கூடாது என எச்சரித்திருக்கிறார் கங்கை அமரன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam