பேச்சு சுதந்திரம் இருந்தா எத பேசுரது தெரியாமா..? பேசலாமா..? – வெற்றி மாறனை பொழந்து கட்டிய கஞ்சா கருப்பு…!

1976 சிவகங்கை பிறந்தவர் கருப்பு ராஜா. யாருன்னு பாக்கறீங்களா அதாங்க நம்ம நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. இவருடைய இயற்பெயர் கருப்பு ராஜா இவர் அறிமுகமான பிதாமகன் திரைப்படத்தில் கஞ்சா விற்பவராக நடித்ததால் அந்தப் பெயரிலேயே பிரபலமாகி கஞ்சா கருப்பு என்று அழைக்கப்படுகிறார்.

இவருடைய எதார்த்தமான நகைச்சுவை நடிப்பார் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் பேசும் மதுரை பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம்.கஞ்சா கருப்பு கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பல முன்னணி பிரபலங்களுடன் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

ஒரு பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்க படங்கள் பிதாமகன், ராம் அறை, எண் 350 கடவுள், சுப்ரமணியபுரம் போன்றவையாகும்.

மேலும் 2014ல் வேல்முருகன் என்னும் திரைப்படத்தை தயாரித்து, அவரே நடித்திருந்தார் அதனால் அப்படம் திரைக்கு வந்த சுவடி தெரியவில்லை, எதிர்பார்த்த அளவு அந்த படம் எந்த வெற்றியும் பெறவில்லை.

 

இதனால் பல கோடி நஷ்டம் ஆகி மிகவும் சிரமப்பட்டுள்ளார் கஞ்சா கருப்பு. மேலும் 2017 விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு 14 நாட்களிலேயே போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் அவர் இந்துவா என்று பேசி சர்ச்சையில் மாட்டிக் இயக்குனர் வெற்றிமாறனை மறைமுகமாக கஞ்சா கருப்பு விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவை பார்த்துவிட்டு இயக்குனர்கள் சும்மா ராஜ ராஜ சோழனின் இந்துவா என்று கேட்கிறார்கள். சினிமாவுக்கு வந்தோமா நல்லா சம்பாதிச்சாமா வீடு வாசலில் வாங்கி செட்டில் ஆனாலும் அப்படியே போயிடனும் அத விட்டுட்டு வீணா சர்ச்சையை கிளப்புற பேச்சுக்களை பேசக்கூடாது.

இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்துக்களுக்கு இவ்வாறு பல பிரபலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது பதிலை கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள். தற்போது சீரியல் நடிகர் ராகவும் இந்த சர்ச்சுக்கு பதில் அளித்துள்ளதாக செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …