கருடன் ப்ளாக் பஸ்டர்..! சூரிக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா..?

தொடர்ந்து வரவேற்பை பெறும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் தற்சமயம் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார் நடிகர் சூரி. பொதுவாக நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகு ஒரு நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பு ஓரிரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகு சூரிக்கு கிடைத்துவிட்டது.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் புரோட்டா காமெடி மூலமாக மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானவர் நடிகர் சூரி. அதற்கு பிறகு தொடர்ந்து பல வருடங்களாக காமெடி நடிகராக நடித்து வந்தார். இவரது காமெடிக்கு தொடர்ந்து வரவேற்பும் இருந்து கொண்டுதான் இருந்தது.

நடிகர் சூரி:

நிறைய முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் கூட முக்கிய காமெடியனாக சூரிதான் நடித்திருந்தார் காமெடி நடிகனாகவே இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் கூட கதாநாயகனாக களம் இறங்கினார் சூரி.

விடுதலை திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்த பொழுது அது வரவேற்பை பெறுமா? என்பது கேள்விக்குறியாகதான் இருந்தது. ஆனால் அந்த திரைப்படம் வெளியான பிறகு அது பெற்ற வரவேற்பு என்பது பெரிய நடிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் அமைந்தது.

அதனை தொடர்ந்து சூரி தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாமே சிறப்பான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாகதான் தேர்ந்தெடுத்து வருகிறார். தொடர்ந்து அவர் நடித்த கொட்டு காளி திரைப்படம் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

தேர்ந்தெடுக்கும் கதைகள்:

இன்னும் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாகவில்லை மூன்றாவதாக அவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கருடன். கருடன் திரைப்படத்தில் ஒரு குடும்பத்திற்கு நன்றி உள்ள கதாபாத்திரமாக இருக்கும் சூரி ஒரு பிரச்சனை வரும் பொழுது அதில் இறங்கி அவர்களுக்கு நன்மை செய்வதை கதையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நடிகர் சூரிதான் பார்க்கப்படுகிறார். விடுதலை திரைப்படத்திலும் சரி கருடன் திரைப்படத்திலும் சரி படத்திற்கு தகுந்தார் போல கதாபாத்திரங்களை மாற்றி சிறப்பான ஒரு நடிப்பை வழங்கி வருகிறார் சூரி.

இதனை அடுத்து கருடன் திரைப்படத்தின் வெற்றியால் அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கே.குமார். இதனை தொடர்ந்து சூரிக்கு ஏதாவது ஒரு பரிசு வழங்க வேண்டுமென்று நினைத்த தயாரிப்பாளர் தற்சமயம் அவருக்கு பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் சேர்த்த கார் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பி.எம்.டபுள்யூ என்றாலே கோடிகளில்தான் அதன் விலை இருக்கும் அப்படி இருக்கும் பொழுது அப்படியான ஒரு காரை அவர் சூரிக்கு வழங்கியிருப்பது சூரிக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version