உங்கள் வீட்டில் நீங்கள் சமையல் செய்யும் கேஸ் ஸ்டவ் பிசு பிசுபாகவும் கரையோடும் இருக்கிறதா? என்ன செய்தும் இந்த கரையும் பிசுபிசுப்பும் போகவில்லை என்ற கவலையில் நீங்கள் இருந்தால் கவலையை விடுங்கள்.
இந்த பொருட்களைக் கொண்டு நீங்கள் உங்கள் கேஸ் அடுப்பை சுத்தம் செய்தால் பள பள என மின்னும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கேஸ் அடுப்பில் மண்டி இருக்கும் எண்ணெய் கரை முதல் மசாலா கரை வரை விடாப்பிடியாக இருக்கும் அத்தனை கரைகளையும் எளிதில் விரட்டி அகற்றக் கூடிய எளிமையான பொருட்கள் நான்கு உள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
வெங்காயம்:
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தைப் பயன்படுத்தி எளிதில் கரைகளையும் பிசுபிசுப்பையும் விரட்டி அடிக்க முடியும்.
இதற்காக நீங்கள் வெங்காயத்தை நன்கு வெட்டி அதனை சிறிதளவு நீரை ஊற்றி வேக விடுங்கள். அதன் பிறகு அந்த நீர் குளிர்ந்த உடன் அந்த நீரை உங்கள் ஸ்டவ்வில் தெளித்து அதன் பிறகு ஒரு ஸ்கிராபர் அல்லது மஞ்சையை கொண்டு நன்றாக தேய்த்து விடுங்கள்.
அவ்வாறு தேய்ப்பதின் மூலம் சில நிமிடங்களில் அந்த கேஸ் ஸ்டவ்வில் இருக்கக்கூடிய கறைகள் விலகிச் செல்லும்.
வினிகர்:
வீட்டில் எப்போதுமே ஊறுகாய் செய்யும்போது அது கெட்டு விடாமல் இருப்பதற்காக பயன்படுத்தும் வினிகரை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் பேக்கிங் பவுடரையும் சேர்த்து கரை உள்ள பகுதிகளில் லேசாக தேய்த்து விட்டால் கரை விரைவில் மறையும்.
எலுமிச்சை:
எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சம் தோலை கொண்டு நன்றாக கேஸ் அடுப்பின் பகுதிகளை அழுத்தி தேய்த்து விட்டால் போதும் அழுக்குகள், கரைகள் நீங்கி பளபளப்பாக கேஸ் அடுப்பு விளங்கும்.
இதனை அடுத்து சிறிதளவு சோப்பு சேர்த்து மீண்டும் நீங்கள் ஒரு முறை கழுவித் துடைத்தால் இது புதிய கேஸ் அடுப்பு போல உங்களுக்கு இருக்கும் .
டிஷ் வாஷ்:
டிஷ் வாஷ் திரவம் எப்போதுமே நீங்கள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தை கேஸ் அடுப்பின் மேல் 3, 4 சொட்டுக்கள் விட்டு அழுத்தமாக தேங்காய் மஞ்சி கொண்டு தேய்க்கும் போது அந்த அடுப்பில் இருக்கக்கூடிய அழுக்குகள், பிசுபிசுபிசுப்புகள் எளிதில் வெளியேறிவிடும் இதன் மூலம் உங்கள் கேஸ் அடுப்பு பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.