எப்படி தமிழ் சினிமாவில் நடிகை ஜெனிலியா வந்த வேகத்திற்கு அதிக வரவேற்பை பெற்று பிரபலமான நடிகையாக மாறினாரோ அதேபோல அப்போதைய கால கட்டங்களில் கௌசல்யா சினிமாவிற்கு வந்த உடனே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தார்.
90களில் அதிகமாக வரவேற்பு பெற்றவராக கௌசல்யா இருந்தார். இவர் தொடர்ந்து கார்த்தி, பிரபுதேவா, விஜய், முரளி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கௌசல்யா துவக்கத்தில் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார்.
கௌசல்யாவுக்கு வந்த வரவேற்பு:
அதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது. முதன்முதலாக தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற பெயரிலேயே இவர் அறிமுகமானார். அந்த திரைப்படம் வெற்றியடைந்த பிறகு கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
இப்போது வரைக்கும் அவரை அனைவரும் கௌசல்யா என்றுதான் அழைத்து வருகின்றனர். தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் நிறைய வெற்றி படங்களை கௌசல்யா கொடுத்து இருக்கிறார். முக்கியமாக அவர் நடித்த திரைப்படங்களில் சொல்லாமலே திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆகும்.
அப்பொழுது சின்ன நடிகராக இருந்த லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடிக்க எந்த பெரிய நடிகையும் ஒப்புக்கொள்ளாத போது கௌசல்யா அதற்கு ஒப்பு கொண்டு வந்த திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பையும் பெற்று கொடுத்தது. ஆரம்ப கட்டத்தில் விஜய் வில்லனாக நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கௌசல்யா நடித்திருந்தார்.
இயக்குனரிடம் வாங்கிய திட்டு:
ஆனால் அதே கௌசல்யா பிறகு திருமலை திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்திருந்தார். பொதுவாகவே நடிகைகளுக்கு இது நடக்கும் விஷயம் தான். இருந்தாலும் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் கௌசல்யா.
அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் என்னை வைத்து திரைப்படம் இயக்ககினார். அதில் ஒரு காட்சியில் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்ததை நான் ஒழுங்காக செய்யவில்லை.
உடனே அவர் என்னை பார்த்து நீ எல்லாம் குரங்கு உங்க மூஞ்ச வச்சிக்கிட்டு எதுக்கு நடிக்க வர என்று திட்டினார். எல்லோரும் முன்பும் என்னை அப்படி திட்டியது எனக்கு அவமானமாக இருந்தது. ஆனாலும் நான் வாங்கும் சம்பளத்திற்கு நான் ஒழுங்காக வேலை செய்யவில்லை எனவே அவர் திட்டியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் அவர் எந்த காட்சிக்காக அப்படி என்னை திட்டினார் என்பது இப்பொழுது எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவர் திட்டியதை மட்டும் மறக்க முடியவில்லை. இதை போல நிறைய திரைப்படங்களில் திட்டு வாங்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் கௌசல்யா.