13 ஆண்டு உறவு.. கமல்ஹாசனை பிரிய காரணம் இதுவா..? கௌதமி சொன்னதை கேட்டீங்களா..?

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராக அறியப்பட்டாலும் கூட சொந்த வாழ்க்கையில் அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் உண்டு. நடிகர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுபவர் கமல்ஹாசன்.

அப்படி இருந்தும் கூட பெண்கள் விஷயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொடர்ந்து அதிக சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக கமல் இருந்திருக்கிறார். அவரது இளமை காலகட்டங்கள் முதலே நிறைய நடிகைகளோடு கிசுகிசுகளுக்கு உள்ளான ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்திருக்கிறார்.

கமல்ஹாசன் திருமண வாழ்க்கை:

அதேபோல அவரது திருமண வாழ்க்கையும் அவருக்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது கிடையாது. கமல்ஹாசன் முதன் முதலில் வாணி கணபதி என்பவரைதான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவருடன் வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே வாழ்க்கை நடத்தினார் கமல் .அதற்கு பிறகு 1988 இல் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன்.

ஆனால் அவருடனும் இவருக்கு சுமுகமான வாழ்க்கை அமையவில்லை தொடர்ந்து நிறைய நடிகைகளுடன் கிசுகிசுப்பில் இருந்து வந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில்தான் இவருக்கும் நடிகை கௌதமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கௌதமியுடன் பிரிவு:

கௌதமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். அதற்கு பிறகு 13 ஆண்டுகள் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இப்படி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கௌதமி உடல் நல ரீதியாக நிறைய பிரச்சினைகளுக்கு உள்ளானார். அப்பொழுது கௌதமியின் பெற்றோர் கூட அவரை பார்த்துக் கொள்ளவில்லை.

கமல்ஹாசன்தான் முழுதாக இருந்து பார்த்துக்கொண்டார் என கூறப்படுகிறது. அப்படி எல்லாம் காதலுடன் இருந்து வந்த கமலஹாசன் 2016-ஆம் ஆண்டு கௌதமியை பிரிந்தார். உண்மையில் கௌதமிதான் கமல்ஹாசனை விட்டு பிரிந்து சென்றார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கௌதமியை பிரிய வேண்டும் என்று நினைக்கவே இல்லை எதனால் கௌதமி கமல்ஹாசனை கைவிட்டார் என்பதே பெரிய கேள்வியாக இருந்து வந்தது. முக்கியமாக இதற்கு சுருதிஹாசன்தான் காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த விஷயத்திற்கு முன்பே கௌதமி ஒரு பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார். அந்த பேட்டிதான் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது அதில் அவர் கூறும் பொழுது அக்ஷரா ஹாசன், சுருதிஹாசன் இருவருமே அற்புதமான பெண்கள்.

சிறுவயதிலிருந்தே அவர்களை நான் பார்த்து வருகிறேன் எங்கள் பிரிவுக்கும் அவர்களுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் கிடையாது. கமலின் கமிட்மெண்ட் மற்றும் என் சுயமரியாதை சார்ந்த விஷயங்கள் காரணமாகதான் நான் கமலை விட்டு பிரிந்தேன் என்று கூறி இருக்கிறார் கௌதமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version