Site icon Tamizhakam

கௌதம் மேனன் இப்படியொரு சம்பவம் பண்ணுவாருன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பிரபலமானவர்களுக்கு பட்டம் என்பது முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மக்கள் அவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்கள் தங்களுக்கான ஒரு பட்டப் பெயரை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று ஒரு பக்கம் இது ஒரு குறித்து வாதம் உண்டு.

அதே சமயம் அவர்களது ரசிகர்கள்தான் நடிகர்களுக்கு பட்டப்பெயரை வைக்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் எது உண்மை என்பது பலரும் அறியாத விஷயம். ஏனெனில் ஒரு நடிகருக்கு இருக்கும் பட்டம் வேறு நடிகருக்கு சினிமாவில் இருக்காது.

அந்த அளவிற்கு புது புது பட்ட பெயரை யார் உக்காந்து யோசிப்பார் இப்படி எல்லாம் நிறைய கேள்விகள் ஒரு நடிகரின் பட்டப்பெயருக்கு பின்னால் உண்டு. இந்த நிலையில் கௌதம் மேனன் இந்த விஷயத்தில் சிறிது வித்தியாசமானவர் என்று கூறப்படுகிறது.

கௌதம் மேனனின் பழக்கம்:

அதாவது தமிழ் சினிமாவில் யார் ஒருவரையும் அவருடைய பட்டத்தை வைத்து அழைக்க மாட்டார் கௌதம் மேனன் என்று கூறப்படுகிறது. ஒரு நேர்காணலில் கூட அவரிடம் தலைவர் என்று கூறும் போது யார் தலைவர் என்று கேட்டிருக்கிறார் கௌதம் மேனன். தமிழ்நாட்டில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இப்போதைய காலகட்டத்தில் தலைவர் என்கிற பட்டம் ரஜினிக்கான பட்டமாகதான் இருக்கிறது. ரஜினியின் பாடல்களில் கூட இந்த தலைவர் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அவருடைய திரைப்படங்களை குறிக்கும் பொழுது தலைவர் 170, தலைவர் 171 என்றுதான் குறிக்கப்படுகிறது.

இப்படி இருக்கும் பொழுது கௌதம் மேனன் யார் தலைவர் என்று கேட்டிருப்பது அப்பொழுதே ஒரு ஆச்சரியமான சம்பவமாகதான் இருந்தது. அதேபோல அஜித் குறித்து ஒரு மேடையில் பேசும்பொழுது தல என்றால் யாரு என்று ஒரு கேள்வியை கேட்பார்.

அஜித்தையும் விடலை:

அப்பொழுது ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். தல என்றால் அஜித் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அப்படி அழைப்பதில் கௌதம் மேனனுக்கு விருப்பமில்லை. எனவே இவர் எல்லா நடிகர்களையும் இப்படித்தான் அழைப்பார்.

யாரையுமே அவர்களின் பட்டப் பெயரைச் சொல்லி அழைக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் விஜய்யை மட்டும் தளபதி என்று ஒரு மேடைப்பேச்சில் அழைத்து இருக்கிறார் . கௌதம் மேனன் உண்மையில் தளபதியின் ரசிகராக இருக்க வேண்டும் அதனால் தான் விஜயை மட்டும் தளபதி என்று அழைக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் அஜித் நடித்திருக்கிறார் இருந்துமே அவரை தல என்று அழைக்காமல் விஜய்யை தளபதி என்று அழைத்திருக்கிறார் கௌதம் மேனன்.

Exit mobile version