நயன்தாரா, த்ரிஷா இருவருமே வேண்டாம்… ரிட்டயர்டு நடிகையை களம் இறக்கிய கௌதம் மேனன்.. பொறுமையும் ஒரு அளவுக்குதான் ப்ரோ!..

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கௌதம் மேனன்.

இவர் சினிமாவிற்கு வருவது வருவதற்கு முன்பு கல்லூரி படித்த காலகட்டம் முதலே இயக்குனர் மணிரத்தினத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்தார் அதனை தொடர்ந்து கல்லூரி முடித்த பிறகு மணிரத்தினத்திடம்தான் உதவி இயக்குனராக சேர நினைத்தார் கௌதம் மேனன்.

ஆனால் அதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து மணிரத்தினம் ஸ்டைலிலேயே மின்னலே திரைப்படத்தை இயக்கினார் கௌதம் மேனன். அது கொடுத்த வெற்றியை தொடர்ந்து தமிழின் முக்கிய இயக்குனராக மாறினார்.

கௌதம் மேனன் அடுத்த படம்:

தற்சமயம் தமிழில் முன்னணி நடிகர்கள் நடிகைகளை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.  இந்த நிலையில் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் நிலுவையில் இருக்கும் நிலையில் அடுத்து ஒரு மலையாள திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார் கௌதம் மேனன்.

இந்த திரைப்படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து நயன்தாராவிடம் பேசும் பொழுது நயன்தாரா நிறைய விதிமுறைகளை போட்டு இருக்கிறார்.

நயன்தாரா அவருக்கு குழந்தை பிறந்தது முதலே இயக்குனர்களிடம் நிறைய விதிமுறைகளை போட்டு வருகிறார். முக்கியமாக சென்னையை விட்டு வேறு இடங்களுக்கு வந்து படப்பிடிப்பில் நடிக்க முடியாது என்று கூறி வருகிறார். இதே விதிமுறைகளை இவர் கௌதம் மேனனிடமும் கூறியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த கௌதம் மேனன் இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக திரிஷாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து திரிஷாவிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அடுத்து தேர்ந்தெடுத்த நடிகை:

ஆனால் திரிஷா தொடர்ந்து விடாமுயற்சி தக் லைஃப் மாதிரியான தமிழ் திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் இப்போதைய சமயத்தில் நடிப்பதற்கு கால் சீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனை தொடர்ந்து அடுத்ததாக சமந்தாவிடம் சென்று பேசியிருக்கிறார் கௌதம் மேனன்.

சமந்தாவிற்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதை அடுத்து வெகு நாட்களாகவே சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் உடல்நில தேறிவரும் நிலையில் நல்ல பட வாய்ப்புக்காக காத்திருந்திருக்கிறார் சமந்தா. எனவே சமந்தா இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சீக்கிரத்திலேயே படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் கௌதம் மேனன் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version