கெட் அவுட் ஆன மாஸ்டர் காயத்ரி ரகுராம்… இனிமேல் அந்தப் பதவிக்கு இசையமைப்பாளர் தினாவா…!!

டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளாக திகழ்ந்தவர் தான் காயத்ரி இவர் சில திரைப்படங்களில் நடித்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்தார்.

 இதனை அடுத்து இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்த வந்த நடிகையும் நடன மாஸ்டர்மான காயத்ரி ரகுராமை ஆறு மாதங்களுக்கு இக்கட்சி சஸ்பெண்ட் செய்திருந்தது.

மேலும் தலைவர் அண்ணாமலை 6 மாதங்கள் கழித்து இவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கனவு தற்போது தகர்ந்து விட்டது.

 இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் காயத்ரி ரகுராம் வகுப்பு வகித்து வந்த வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சித் துறையின் மாநில தலைவராக இனி இசையமைப்பாளர் தினாவை நியமிப்பதாக அறிவித்தார்.

 இவர் சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, மெட்டி ஒலி உட்பட்ட பல தொடர்களுக்கு இசையமைத்தவர் அதுமட்டுமல்லாமல் சினிமாவில் ஏராளமான படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

 குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இவர் இசையில் உருவான மன்மத ராசா படம் சூப்பர் ஹிட் ஆன அடித்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் படத்தில் திருப்பாச்சி இடம்பெற்ற கும்பட போன தெய்வம் உள்ளிட்ட பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும்  ஒலித்தது.

இதனை அடுத்து இவர் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதோடு அந்த கட்சியின் போராட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு அதிதீவிரமாக கட்சிப் பணிகளை ஆற்றி வந்த நிலையில் இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கதை என்பது போல பேசி வருகிறார்கள்.

எனவே இந்த பதவியில் இவர் என்னென்ன சாதிக்கப் போகிறார் என்பது வர இருக்கக்கூடிய நாட்களில் நமக்குத் தெரியவரும்.

மேலும் இவர் அந்தப் பதவியை தக்க முறையில் பயன்படுத்தி அனைத்து வகையிலும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று அனைவரும் இவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த கோரிக்கையை அவர் சீரான முறையில் செயல்படுத்துவார் என்று தெரிய வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …