“என்ன காரியம் பண்றீங்க காயத்ரி நீங்க..” No.. No.. வேணவே.. வேணாம்.. கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்..!

சன்டிவியில் தென்றல் சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

காயத்ரி யுவராஜ்

காயத்ரி யுவராஜ், கடந்த 2011ம் ஆண்டில் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் டான்ஸ் புரோகிராம், சீரியல் என பிஸியாக இருந்து வருகின்றனர். தங்களது கேரியரில் இருவரும் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஜீ தமிழ் டிவி சேனலில் நடத்தப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக இருவரும் வெற்றி பெற்றனர்.

விஜய் டிவியில் நடத்தப்பட்ட மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் யுவராஜ், காயத்ரி கலந்துக்கொண்டனர்.

சமூக வலைதளங்களில்…

இப்படி தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளை, மக்கள் மத்தியில் காட்சிப்படுத்த சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் காயத்ரி யுவராஜ்.

சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என தொடர்ந்து பல முன்னணி சேனல்களில் சீரியல்களில் நடித்து வரும் காயத்ரி யுவராஜ், கர்ப்பமாக இருந்தார். அப்போதும் ஜீ தமிழ் சேனலில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வந்தார்.

பேறுகாலம் நெருங்கிய நிலையில்தான், அவர் சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று, பெண் குழந்தை அவருக்கு பிறந்தது.

காயத்ரி பிறந்த நாளில்…

இதில் விசேஷம் என்னவென்றால், காயத்ரி பிறந்த நாளில் அவருக்கு மகள் பிறந்ததுதான். இந்த இரட்டிப்பு சந்தோஷத்தை மிக மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கொண்டாடி, அந்த புகைப்படங்களையும் தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டார் காயத்ரி யுவராஜ்.

முதலில் தனது பெண் குழந்தையின் முகத்தை மறைத்து புகைப்படங்களை வெளியிட்ட காயத்ரி யுவராஜ், கடந்த ஜனவரி முதல் தனது மகன், மகள் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இணையதள பக்கங்களில் வெளியிட்டு சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார்.

பதிவிடாதீர்கள்…

யுகா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள தனது மகளின் புகைப்படத்தை சுட்டி கண்ணம்மா என கேப்ஷனுடன் அடிக்கடி பதிவிடுகிறார் காயத்ரி யுவராஜ். வளரும் குழந்தையின் படத்தை இப்படி அடிக்கடி பதிவிடாதீர்கள். வளர்ந்த பின் பதிவிடுங்கள் என்ற பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து காயத்ரி, தனது மகளின் புகைப்படங்களை பதிவிடுவதால், என்ன காரியம் பண்றீங்க காயத்ரி நீங்க..” No.. No.. வேணவே.. வேணாம்.. குழந்தை வளரும் வரை, புகைப்படங்களை பதிவிடாதீர்கள், என அன்பாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version