கவினோட பேசவே தோணாது.. கீதா கைலாசம் கூறிய உண்மை..!

தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரமாகத் திகழ்ந்த கே பாலச்சந்தரின் மருமகள் தான் கீதா கைலாசம் என்று சொன்னால் நீங்கள் வியந்து போவீர்கள்.

தற்போது நடிகையாக மாறியிருக்கும் கீதா கைலாசம் தனது ஐம்பதாவது வயதில் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்து அசத்தியவர்.

நடிகை கீதா கைலாசம்..

முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் அளப்பரிய பணியை ஆற்றி இருக்கிறார்.

பல படங்களை இயக்கி இருக்கும் பாலச்சந்தர் இயக்குனராக இருந்தாரே தவிர நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்த அவரை உத்தம வில்லன் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் கேட்டுக் கொண்டதை அடுத்து ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் குடும்பத்தில் இருந்து நடிப்பில் களம் இறக்கக்கூடிய பாலச்சந்தனின் மகன் கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம் தற்போது பேசியிருக்கும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து கவிதாலயா நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் செய்து வந்த இவர் தனது மகள் ஊக்குவித்ததின் காரணத்தால் தான் திரைத்துறையில் நடிக்க வந்ததாக கூறியிருக்கிறார். அத்தோடு சர்பேட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.

அது போலவே ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளி வந்த வீட்டுல விசேஷங்க படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து தனது குணச்சித்திரன் நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

கவினோட பேசவே தோணுது..

இந்நிலையில் சிறு, சிறு வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் பெரிய அளவு ரசிகர்களின் கவனத்தை பெற முடியவில்லை. அந்தக் குறையை தீர்க்கக் கூடிய வகையில் தற்போது கவின் நடிப்பில் வெளி வந்திருக்கும் ஸ்டார் படத்தில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது என கூறலாம்.

இந்தப் படத்தில் நடிகர் கவினுடன் இணைந்து பயணம் செய்வது குறித்து கீதா கைலாசம் அண்மை பேட்டியில் பேசிய போது படப்பிடிப்புத் தளத்தில் கவினோடு பேசவே தோணாது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஸ்டார் திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மத்தியில் பேசப்படுவதோடு பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

இந்த படத்தில் கவினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் நடிகை கீதா கைலாசம் படப்பிடிப்பின் போது அதிக அளவு கவினோடு பேசாததற்கு காரணம் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக கவின் இருந்ததால் தன்னால் பேச முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார்.

கீதா கைலாசம் கூறிய உண்மை..

மேலும் ஷூட்டிங் சமயத்தில் கவின் தன்னுடைய கெட்டப் மூடுலேயே இருப்பதால் இடைவேளை சமயத்தில் கூட சிரித்து பேசுவதோ.. அரட்டை அடிக்கணும் வேண்டும் என்று தோன்றுவதோ கிடையாது.

அது அவருடைய பணிக்கு தடையாக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் என்னுடைய கேரக்டர் பற்றி நானும் சீரியஸாக செய்ய வேண்டும் என மாறி விடுவேன்.

எனவே தான் இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு ரோலும் மெனக்கெட்டு செய்வதோடு மட்டுமல்லாமல் அந்த கேரக்டருக்காக நடிகர் கவின் அதிக அக்கறை செலுத்தியது மலைப்பாக இருந்ததாக கூறிய அவர் முதல் பாதியில் பெரிய கவனத்தை ஈர்த்த ஸ்டார் படம் இரண்டாவது பாதியில் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக எழுந்துள்ள விமர்சனம் பற்றி கூறியிருக்கிறார்.

மேலும் படப்பிடிப்பு சமயத்தில் கவின் தீவிரமாக ஸ்டார் படத்தில் கண்ணும் கருத்துமாக நடித்ததின் காரணத்தால் தான் அவரோடு பேச முடியவில்லை என்ற விஷயத்தை கூறியது ரசிகர்களின் மத்தியில் கவின் படத்தை வெற்றி படமாக முழு அர்ப்பணிப்பு செய்திருக்கிறார் என்று சொல்ல வைத்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version