சாவித்திரிக்கு பிறகு ஜெமினிகணேசன் 4வதாக திருமணம் செய்து கொண்ட அந்த இளம் சிட்டு யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் ஜெமினி கணேசன். இவருக்கு சாம்பார் என்று இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அதற்கு காரணம் என்னவென்றால், இவர் சாம்பாரை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம். ஆனால் இந்த பெயரை விட காதல் மன்னன் என்ற பெயர் நிலைத்து விட்டது.ஏனெனில் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபித்து விட்டார்.

ஏனெனில் 70வது வயதில், நான்காவது திருமணம் செய்து கொண்ட ஒரே நடிகர் தமிழ் நடிகர் இவராக மட்டுமே இருப்பார்.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன், தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தவர். எம்ஜிஆர் சிவாஜி வரிசையில் தமிழ் சினிமா நடிகர்களில் ஜெமினி கணேசனுக்கும் ஒரு சிறப்பான இடம் உண்டு.

நடிகர் ஜெமினி கணேசன் தன் வாழ்க்கையில் 1940ம் ஆண்டு முதல் 1998 வரை, 58 ஆண்டுகளில் நான்கு திருமணங்கள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசன் குறித்து அவரது மகள் பிரபல டாக்டர் கமலா செல்வராஜ் கூறுகையில், இதுவரை என் அப்பா எந்த பெண்ணையும் தேடிப் போனதில்லை. என் அப்பாவை தேடி வந்த பெண்கள் தான் அதிகம். என் அப்பா ஜெண்டில் மேனாக தான் நடந்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

19 வயதில் முதல் திருமணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஜெமினி கணேசன். அவர் திறமையான ஒரு மனிதர். சிறந்த நடிகர். சிறப்பாக பாட்டு பாடுவார். யோகா செய்வார். கார் வேகமாக ஓட்டக்கூடிய திறமை பெற்றவர்.

3வது மனைவி சாவித்திரி

கடந்த 1940ம் ஆண்டில் அலமேலு என்பவரை முதல் திருமணம் செய்தார். அவருக்கு அப்போது 19 வயது. அதன் பிறகு 1950ம் ஆண்டில் நடிகை புஷ்பவல்லி என்பவரை 2வது திருமணம் செய்தார். அதன்பிறகு 1952ல் நடிகை சாவித்திரியை 3வது திருமணம் செய்தார். மூன்று திருமணங்களை செய்த வகையில், ஜெமினி கணேசனுக்கு 6 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெமினி கணேசன் தனது 70வது வயதில், 36 வயதுடைய ஜூலியானா ஆண்ட்ரூஸ் என்ற பெண்ணை, 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

ஜூலியானா ஆண்ட்ரூஸ்

ஜெமினி கணேசனிடம் அந்தரங்க காரியதரிசியாக பணிபுரிந்தவர் தான் ஜூலியானா ஆண்ட்ரூஸ். ஜெமினி கணேசனிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதால், சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஜெமினி கணேசனை திருமணம் செய்துக்கொண்டார்.

1998ம் ஆண்டில் ஜெமினி கணேசனுக்கும், ஜூலியானாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணமான ஐந்து மாதங்கள் இவர்கள் தி நகரில் உள்ள பிளாட்டில், தம்பதியாக வசித்து வந்தனர்.

சொத்துகளை அபகரிக்க திட்டம்

அடுத்த ஐந்து மாதங்களில், 1999 முதல் பிரச்சனை ஆரம்பமானது. ஜெமினி கணேசனுடைய சொத்துக்களை தன் பெயரில் எழுதி வைக்குமாறு ஜூலியானா ஆண்ட்ரூஸ், அவரை தொல்லை செய்திருக்கிறார்.

சிங்கப்பூரில் வசித்த வசதியாக என்னை, ஜெமினி கணேசன் வற்புறுத்தி அழைத்து வந்து திருமணம் செய்ததாகவும், அவரை விவாகரத்து செய்ய 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் ஜூலியானா ஆண்ட்ரூஸ் கேட்டுள்ளார் இந்த விவகாரம், கருணாநிதியிடம் சென்றுள்ளது.

ரூ. 7லட்சம்

கடைசியில் 7 லட்சம் ரூபாய் கொடுத்து, இந்த பிரச்சனையை முடித்து வைத்துள்ளார் கருணாநிதி.

அந்த காலகட்டத்தில், மிகப்பெரிய அழகிய நடிகையாக இருந்தவர் சாவித்திரி. அவருக்கு பிறகு ஜெமினிகணேசன் 4வதாக திருமணம் செய்து கொண்ட 36 வயது இளம் சிட்டு ஜூலியானா ஆண்ட்ரூஸ் என்பதை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். 70 வயதிலும் காதல் மன்னன் என ஜெமினி கணேசன் நிரூபித்திருக்கிறாரே என வாய் பிளக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version