தமிழ் சினிமாவில் காதல் மன்னராக திகழ்ந்து வந்த ஜெமினி கணேசன் நிஜ வாழ்விலும் காதல் மன்னனாகவே திகழ்ந்திருக்கிறார். இவரை சுற்றிலும் எப்போதும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
இவருக்கு தெரிந்து நான்கு மனைவிகள் என்று சொல்லப்பட்டாலும் தெரியாமல் எவ்வளவு என்று கணக்கில் எடுக்க முடியாது. இப்படி ஒரு பிளேபாயாக அந்த காலத்தில் வலம் வந்தவர் தான் ஜெமினி.
ஆனால் இதில் ஒரு உண்மையான விஷயத்தை யாரும் தெரிந்து கொள்ளவே இல்லை. இவர் எந்த பெண்களையும் தேடிச் சென்றதே இல்லை. அந்த வகையில் தன்னை தேடி வருபவர்களோடும் மட்டுமே ரிலேஷன்ஷிப்பில் இவர் இருந்திருக்கிறார்.
ஆனால் நடிகையர் திலகம் சாவித்திரியை பொறுத்தவரை இவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப நாட்களில் இவர்களது திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது.
எனினும் இடையில் ஜெமினிகணேசனுக்கு சினிமாவில் ஏற்பட்ட சருக்கள் காரணமாக சாவித்திரி ஜெமினியிடன் கொண்டிருந்த பிடியிலிருந்து சற்று விலகி வெளியே வந்தார்.
அதற்குக் காரணம் அந்த சமயத்தில் சாவித்திரியின் புகழ் உச்சத்தில் இருந்தது இதன் காரணமாகவும் சகநடிகர்கள் உடன் இவர் கொண்டிருந்த நட்பு மற்றும் குடிப்பழக்கம் முற்றிலும் ஜெமினி கணேசன் இடமிருந்து இவரை பிரித்துச் சென்றது.
மேலும் ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசன் தனக்குத் தேவையே இல்லை என்ற முடிவையும் சாவித்திரி தான் எடுத்தாரே ஒழிய அதற்கும் ஜெமினி கணேசனுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. உண்மையில் இதுதான் நடந்தது.
ஆனால் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கூறிய சாவித்திரியின் படத்தில் இதை அப்பட்டமாக கூறி இருக்கும்போது எனக்கு வயிறு எரிந்து விட்டது என்று ஜெமினி கணேசனுக்கு நெருக்கமாக இருந்த டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த டாக்டர் காந்த வேறு யாருமில்லை. எம்ஜிஆர் ஆட்சியில் சபாநாயகராக இருந்த ராஜா ராமின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். மேலும் சாவித்திரியின் இறுதி காலத்தில் அவருடைய நிலையை அறிந்துகொண்டு அவருக்கு உரிய உதவிகளை செய்தவர் ஜெமினி கணேசன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல இன்னொரு மனைவியாகிய புஷ்பவல்லியும் இவரை ஒதுக்கி விட்டு சென்றார். எனவே ஜெமினிகணேசன் வாழ்க்கையை பொருத்தவரையில் அவர் எந்தப் பெண்ணையும் கழட்டி விடவில்லை அந்தப் பெண்களை அவரை விட்டு ஓடினார்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்படி இருக்க ஜெமினியை எப்படி காதல் மன்னராக சித்தரிக்கலாம் என்ற கேள்வி இன்றும் தனக்குள் எழுகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.