டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா..? – வியக்க வைக்கும் வெந்து தணிந்தது காடு..!

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களை திருப்திப்படுத்திய நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு பலவிதமான விமர்சனங்களுக்கு இடையே மாபெரும் வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது.

இந்த படமானது சிம்புவிற்கு மூன்றாவது கூட்டணி அதாவது சிம்புவும் கௌதம் மேனனும் ஏ ஆர் ரகுமான் மூவரும் இணைந்து கொடுக்கக்கூடிய மூன்றாவது வெற்றி படம்.  இந்த படத்தை பற்றிய பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததால்தான் இந்த படம் பெருமளவு வெற்றியை அடைந்தது என்று அனைவரும் கூறுகிறார்கள்.

இந்த படத்துக்காக தன் உடல் எடையை கடுமையாக குறைத்து இளைஞரைப் போல் காட்சியளித்த சிம்புவின் கலக்கல் நடிப்பால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று இருக்கிறார்கள். இது ஒரு கம் பேக் படமாகவும் அவருக்கு அமைந்துவிட்டது.

 இந்த சூழ்நிலையில் திரையுலகில் இருப்பவர்கள்  தயாரிப்பாளர் ஐசரி கணேசன் எதற்காக சிம்புவுக்கும் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் இவ்வளவு காஸ்ட்லியான கார்  மற்றும் பைக் வாங்கி கொடுத்திருக்கிறார். இது ஒன்றும் பெரிய அளவு வசூலை திரையரங்குகளில் செய்து சாதனை படைக்கவில்லை ஏதோ ஓரளவு ஓடியுள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஐசரி கணேசன் கூறியிருப்பது அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .இந்த படம் திரையரங்குகளில் ஓரளவு ஓடி இருந்தாலும் பரவாயில்லை.

இந்த படமானது டிஜிட்டல்  சாட்டிலைட் மட்டும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் காக சுமார் இருபத்தி ஐந்து கோடிகளுக்கு மேல் இவருக்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்று சந்தோஷத்தின் உச்சத்தில் தயாரிப்பாளர் இருந்த காரணத்தினால் தான் 2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை இயக்குனர் கௌதம் மேனனுக்கு பரிசாக வழங்கினார்.

மேலும் 90 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபையர் காரை அன்பளிப்பாக  நடிகர் சிம்புவுக்கு கொடுத்திருக்கிறார். இந்த ரகசியம் புரியாமல் இவரை ஏதோ காசை வாரி இறைத்து கொடுத்துவிட்டது போல் பலரும் கருதி வேடிக்கை பொருள் ஆக்கினார்கள்.

 இப்போது உங்களுக்கு எல்லோருக்கும் புரிந்திருக்கும் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது. தற்போது சிம்பு மீண்டும் என்ன செய்வார் என்பது போன்ற கருத்துக்கள் பரவி வரக்கூடிய நிலையில் அடுத்த படப்பிடிப்பு எப்போது சிம்புவின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் வேறு திசையில் சிந்தனையை திருப்பி விட்டார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …