தமிழ் சினிமாவில் முன்பு கவர்ச்சி நடிகைகளுக்கு என்று ஒரு காலகட்டம் இருந்தது. கவர்ச்சியான நடிகைகளுக்கு என்று தனியாக ரசிக்கப்பட்டாளம் இருந்தது. இதனாலேயே பிரபலமான கவர்ச்சி நடிகைகளை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வைப்பதை இயக்குனர்களும் பின்பற்றி வந்தனர்.
ஆனால் இப்பொழுது எல்லாம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிப்பு என்பதே குறைந்துவிட்டது. தெலுங்கு, ஹிந்தி மாதிரியான சினிமாக்களில் இன்னமும் அதிகமாக கவர்ச்சி இருந்து வருகிறது. ஹிந்தியில் இப்பொழுதும் நோரா ஃபெத்தி மாதிரியான கவர்ச்சி நடிகைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடையாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் மாதிரியான பெரும் நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்த சில்க் ஸ்மிதா கண்களாலேயே கிரங்கடிக்கும் கவர்ச்சியை கொண்டவர்.
சில்க் ஸ்மிதாவுக்கு இருந்த மார்க்கெட்:
அதனாலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலில் சில்க் வந்து நடனம் ஆடினால் போதும் அதற்காகவே அந்த படத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்க்க துவங்கினார்கள். விஜயலட்சுமி என்ற பெயரை கொண்ட சில்க் ஸ்மிதா ஆந்திராவை சேர்ந்தவராவார்.
மிகவும் வறுமையான ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்த சில்க் ஸ்மிதா பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்பொழுதுதான் அவருக்கு இந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் சில்க் ஸ்மிதா.
அவருக்கு பிறகு சில்க் ஸ்மிதாவின் இடத்தை எந்த ஒரு நடிகையாளும் நிரப்ப முடியவில்லை. வினுசக்ரவர்த்திய இயக்கிய வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக அறிமுகமானார் சில்க் ஸ்மிதா.
பழைய நடிகரின் நினைவுகள்:
அந்த திரைப்படத்தில் அவருடைய பெயர் சில்க் என்று இருந்ததால் பிறகு அதையே அவருடைய பெயராக மாற்றிக் கொண்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த நடிகையாக இருந்து திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
அது தமிழ் சினிமாவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. ஏனெனில் அப்பொழுது இருந்து நிறைய நடிகைகள் சில்க் ஸ்மிதா மீது காதல் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவரை குறித்து பழைய நடிகரும் இயக்குனருமான ஜி.எம் குமார் ஒரு பேட்டியில் கூறும் பொழுது சில்க் ஸ்மிதா மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது என்பது உண்மைதான்.
அவர் மிகவும் மனிதாபிமானம் கொண்டவர். அனைவருக்கும் உதவ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதேபோல அவரை முழுமையாக பார்த்துக் கொள்ளும் அவர் மீது அதிக அன்பு காட்டும் ஒரு காதலை வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா.
நான் அந்த சமயத்தில் எனது மனைவியான பல்லவியுடன் மிகுந்த காதலில் இருந்து வந்தேன். ஒருவேளை நான் மட்டும் அப்பொழுது எனது மனைவியை காதலிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக சில்க் ஸ்மிதாவை தான் காதலித்து திருமணம் செய்திருப்பேன் என்று கூறுகிறார் ஜி.எம் குமார். இவர் பாலா இயக்கிய நான் கடவுள், அவன் இவன் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.