நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படத்தின் இரண்டாம் நாள் வசூல் அதிரடியாக சரிவை கண்டிருக்கிறது. மிகவும் வலுவான ஓபனிங் தொடர்ந்து இரண்டாம் நாள் வேலை நாள் என்பதால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள்.
இரண்டாம் நாள் 24.75 கோடி ரூபாயாக குறைந்துள்ள கோட் படத்தின் வசூல் மொத்தமாக இரண்டாம் நாள் 68 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
இரண்டாவது நாள் திரையரங்குகளில் எத்தனை சதவீதம் ரசிகர்கள் நிரம்பி இருந்தார்கள் என்ற ஆக்குபன்சி ரிப்போர்ட்டும் நமக்கு கிடைத்திருக்கிறது.
அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப கணிசமாக வேறுபடுகின்றன. யூகிக்கக்கூடிய காட்சிகள் குடும்ப செண்டிமெண்ட் என நகர்கிறது முதல் பாதி. ஆனால், இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து படத்தின் திரைக்கதையை பரபரப்பாகி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. முதல் நாள் 126 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் நாள் வசூல் கணிசமாக குறைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 44% சரிவை கண்டிருக்கிறது. மொத்தமாக, 68.75 கோடி ரூபாயை இரண்டாம் நாள் முடிவில் வசூல் செய்திருக்கிறது கோட் திரைப்படம்.
வெள்ளிக்கிழமை அன்று கோட் படத்தின் தமிழ் ஆக்குபன்சி 60.38% ஆக இருந்துள்ளது.
தமிழ் பதிப்பு அடிப்படையில்..
காலைக் காட்சிகள் 45.99 சதவீதமும்
மதியம் காட்சிகள் 55.14 சதவீதமும்
மாலை காட்சிகள் 66.06 சதவீதமும்
இரவு காட்சிகள் 74.32 சதவீதமும் என திரையரங்குகள் நிரம்பி இருக்கின்றன.
இரண்டாவது நாள் முடிவில் மாவட்ட அடிப்படையில்..
சென்னையில் 88.75 சதவீதமும்
பெங்களூர் 34.25 சதவீதமும்
மதுரையில் 63.75 சதவீதமும்
கோவையில் 79.75 சதவீதமும்
பாண்டிச்சேரியில் 93.75 சதவீதமும்
சேலம் 67.25 சதவீதமும்
வேலூரில் 67.5 சதவீதமும்
திண்டுக்கல்லில் 91.25%
கொச்சியில் 22.00 சதவீதமும்
திருச்சியில் 94.50 சதவீதமும்
திருவனந்தபுரத்தில் 27.0 சதவீதமும்
மும்பையில் 24.75 சதவீதமும் திரையரங்குகள் நிரம்பி இருக்கின்றன.
இந்தியா தலைநகரமான டெல்லியில் 10% மட்டுமே திரையரங்குகள் நிரம்பி இருக்கின்றன.
நடிகர் விஜயின் கோட் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தாலும் கூட இரண்டாம் நாள் வேலை என்பதால் கணிசமான வசூல் குறைந்து இருக்கின்றது.
இன்று சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அடுத்தடுத்த வசூல் நிலவரங்களை தொடர்ந்து பார்க்கலாம் இணைந்து இருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.