நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார்.
2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன.
கோட் படம்:
சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே அஜித்தை வைத்து திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர்கள் கை வசம் சென்றிருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் 68வது திரைப்படமான கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஏற்கனவே அதிக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் மாநாடு திரைப்படம் போலவே இந்த திரைப்படத்தையும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இயக்குகிறார் வெங்கட் பிரபு. படத்தின் கதையே ஒரு சயின்ஸ் பிக்சன் கதைதான் என்று கூறப்படுகிறது.
அதிரி புதிரியா இருக்கு
படத்தின் கதைப்படி படத்தில் மூன்று விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் பாடல்கள் வெளியான பொழுது கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்கள் அது குறித்து வந்தன. பிறகு பாடத்தின் மூன்றாவது பாடல் வந்த பொழுது அதில் வரும் இளமையான விஜய் அவ்வளவாக நன்றாக இல்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தது.
பிறகு ட்ரெய்லர் வெளியிடும் பொழுது அவற்றையெல்லாம் மாற்றி வெங்கட் பிரபு ஓரளவு சரி செய்து வெளியிட்டு இருந்தார். இருந்தாலும் சில ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பலரும் முன்பிருந்த விஜய்க்கு இது எவ்வளவோ தேவலை என்று கூறியிருந்தனர்.
தளபதி வேற லெவல்
பாடல் வெளியிடும்போது செய்யும் பொழுது கல்லூரி படிக்கும் வயதில் உள்ள விஜய்யை உருவாக்குவதில் அவரை அதிக இளமையாக உருவாக்கியிருந்தார் வெங்கட் பிரபு. அது ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாதது பிரச்சனையாக இருந்தது.
இந்த நிலையில் தற்சமயம் முழுவதுமாக விஜய்யை மீண்டும் மாற்றி அமைத்து இருக்கின்றனர். தற்சமயம் அது தொடர்பான புகைப்படங்கள் பட குழுவில் இருந்து வெளியாகி இருக்கிறது. அவற்றில் விஜய் பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாகவே இருக்கிறார் அந்த புகைப்படங்கள் இப்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.