வெளியானது GOAT படத்தின் மூன்றாவது சிங்கிள்..! இதை கவனிச்சீங்களா..?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை என்பதையும் அறிவித்துவிட்டார்.

2026 தேர்தலுக்குப் பிறகு சுத்தமாக நடிப்பை விட்டு வெளியேறப் போவதாக விஜய் கூறியிருப்பதால் அடுத்து வருகிற விஜய் படங்கள் எல்லாமே விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் படங்களாக இருக்கும். இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்திலேயே சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் நல்ல வெற்றியை கொடுக்க முடியும் என்று நிரூபித்து இருந்தார்.

அந்த வகையில் தற்சமயம் கோட் திரைப்படத்தையும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகதான் எடுத்து வருகிறார் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபுவிற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக கோட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபுவிற்கு முக்கிய படம்:

ஏனெனில் வெங்கட் பிரபு சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதல் இதுவரை விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் கூட இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படம் கண்டிப்பாக வெங்கட் பிரபுவிற்கு அதிக வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் கதாநாயகிகளும் மூன்று பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இளமை காலத்து விஜய்யை கிராபிக்ஸ் தொழில்நுட்ப முறையில் மிகவும் இளமையாக மாற்றி இருப்பது அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அந்த விஜய்க்கு வரும் டூயட் பாடல் ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. நடிகை மீனாட்சி சௌத்ரி இளமை விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மூன்றாவது பாடல்:

ஏற்கனவே கோட் திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து அடுத்து வரும் பாடல்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என்று கவனமாக இருந்தார் யுவன் சங்கர் ராஜா.

அந்த வகையில்தான் அடுத்து அவர் வெளியிட்ட சினேகா மற்றும் வயதான விஜய்க்கான பாடலும் கூட நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. ஏஐ முறையில் அந்த பாடலில் பவதாரணியை பாட வைத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. இந்த நிலையில் இந்த பாடல் யுவன் சங்கர் ராஜாவே பாடியிருக்கும் பாடல் என்பதால் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version