இது வொர்க் அவுட் ஆகியிருக்கு..! GOAT எப்படி இருக்கு..? படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..! வாங்க பாக்கலாம்..!

GOAT : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தின் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறதா..”? படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள்.

வாருங்கள் பார்க்கலாம்.. **மால இதுதாண்டா சினிமா. இதற்கு முன் பார்த்திராத காட்சிகள். மிகவும் வேகமாக செல்லும் முதல் பாதி. எதிர்பாராத அறிமுகம். விசில் போடு பாடல் ரசிகர்களுக்கு சரியான விருந்து.

ரோலர் கோஸ்டரில் பயணித்தது போன்ற அனுபவம். முதல் பாதியில் கிடைக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் அதிலும் குறிப்பாக இடைவேளை காட்சி ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது என கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

விஜய் அண்ணாவின் நடிப்பு உச்சத்தில் இருக்கிறது. எமோஷனல் காட்சிகள் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. விசில் போடு பாடல் அருமையாக இருக்கிறது. வொர்த்து வர்மா என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

படத்தின் அறிமுக காட்சிகள் மனதை அள்ளுகின்றது. நடிகர் விஜய்யை இப்படியான தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்ப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது.

சினேகாவின் கதாபாத்திரம் மற்றும் குடும்ப காட்சிகள் எமோஷனலாக கனெக்ட் ஆகி இருக்கிறது.

போரடிக்க கூடிய விதத்தில் பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை என கூறியிருக்கிறார. இந்த ரசிகர்.

யோவ் வெங்கட் பிரபு என்னய்யா பண்ணி வச்சிருக்க முதல் பாதி போனதே தெரியல என கூறியிருக்கிறார் இந்த ரசிகர். தொடர்ந்து ரசிகர்கள் இது குறித்து கருத்துக்களை பதிவு செய்து கொள்கிறார் அதனை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version