தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
“தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கிற இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி இளம் நடிகையாக நடிக்கிறார் .
விஜய்யின் GOAT திரைப்படம்:
இவர்களுடன் பிரசாந்த் , பிரபுதேவா , லைலா, வைபவ் , மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் .
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடி நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
அப்பா மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் விஜய்யின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி. மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.
எதிர்பார்ப்பில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்:
இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. இப்படத்தில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விஜய்யின் தோற்றம் உருவாக்கப்பட்டதாக செய்திகள் வெளி வந்தது.
படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என பட குழுவினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் மும்முரமாக இறங்கி விடுவார் என கூறப்படுகிறது . எனவே இதுதான் கடைசி திரைப்படமாக இருக்கும் என யூகிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்க மிகப்பெரிய அளவில் காத்திருக்கிறார்கள். 49 வது வயதாகும் விஜய்யுடன் ஜோடி போட்டு நடிக்க பல முன்னணி நடிகைகள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீனாட்சி சவுத்ரி என்ற இளம் நடிகை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார்.
நடிகை மீனாட்சி சௌத்ரி:
இதனால் யார் அந்த மீனாட்சி சௌத்ரி என பலரும் தேட துவங்கினார்கள். வெறும் 27 வயதே ஆகும் மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி வடிவழகியாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் மருத்துவராக இருந்து வருகிறார். இதனிடையே மாடலிங் துறையில் தனக்கு இருந்த ஆர்வத்தால் 2018 ல் நடைபெற்ற “பெமினா மிஸ் இந்தியா” போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்ட மீனாட்சி, 2018ல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இப்படி தொடர்ச்சியாக மாடல் அழகியாக பல்வேறு விருதுகளைப் பெற்று பிரபலமான இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான “இசட வாகனமுலு நிலுபரடு” படத்தில் நடிகையனார்.
இறுக்கமான உடையில் இழுக்கும் மீனாட்சி:
தெலுங்கில் பிரபலமான இளம் நட்சத்திர ஹீரோயினாக பார்க்கப்பட்ட இவர் தமிழில் ஸ்டார் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் இவர் மீதான ரசிகர்கள் கவனம் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் மீனாட்சி சௌந்தரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடையில் இருட்டு அறையில் நின்று கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்திருக்கிறார் மீனாட்சி.
இதை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல காட்டுனா உடம்பு பாடி தாங்காது செல்லம் என கிறங்கிப்போய் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.