Site icon Tamizhakam

படம் ஃபுல்லா Reference.. இது எரிச்சலா இருக்கு.. விஜய் எப்படி இந்த படத்தை ஒத்துக்கிட்டார்.. GOAT-ஐ விளாசிய GOPI..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள GOAT திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், வெளியான இந்த திரைப்படம் குறித்து இணைய பக்கங்களில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யூட்யூபர் கோபி என்பவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இதில் இந்த படம் குறித்தான தன்னுடைய ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் கதை, ஆக்சன் என எதுவுமே புதிதாக இல்லை. நடிகர் விஜயின் முந்தைய படங்களில் ஹிட்டான காட்சிகளை ஒவ்வொன்றாக தேடிப் பிடித்து அதனை ஒட்டுமொத்தமாக ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.

காப்பியடிப்பது என்றால் அட்லீ என்று கூறுவார்கள்.. அட்லீ என்ன பெரிய அட்லீ அவருக்கே நான் டஃப் கொடுக்கிறேன் பாருங்கள் என்று வெங்கட் பிரபு இந்த வேலையை செய்து வைத்திருக்கிறார்.

படம் முழுதும் வேறு வேறு படங்களின் ரெஃபரன்சை மட்டும் தான் பார்க்க முடிகிறது. ஒரு கட்டத்தில் அதுவே எரிச்சலாகவும் இருக்கிறது. தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் விஜய் பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் ஆகிய நான்கு பேரும் எந்த ஒரு வேலையை கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக் கூடியவர்கள்.

ஆனால், ஒரே ஒரு வேலையை செய்யும் போது மட்டும் சில தவறுகள் நடந்து வருகிறது. இதனால் அதிலிருந்து வில்லன் எஸ்கேப் ஆகி விடுகிறார்.

இப்படி எஸ்கேப்பான வில்லன் இந்த நான்கு பேருக்கும் எப்படியான பிரச்சினைகளை கொடுக்கிறார். அதிலிருந்து எப்படி இந்த நான்கு பேரும் மீண்டும் வருகிறார்கள்..? என்பதுதான் படத்தின் ஒன் லைனாக இருக்கிறது.

இந்த கதையை வைத்துக்கொண்டு படத்தை மூன்று மணி நேரம் எடுத்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

என்னைக் கேட்டால் இந்த படத்தை ஒரு மணி நேரத்தில் முடித்துவிட முடியும். அந்த அளவுக்கு தேவையில்லாத காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன என்ற தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version