என்னப்பா சொல்றீங்க.. G.O.A.T படத்துல விஜய்க்கு தங்கச்சி இந்த நடிகையா..? வேற லெவலா இருக்குமே..

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் அவரது 68 வது படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். அதாவது ஆங்கிலத்தில் GOAT. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் இரட்டை ரோலில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இரட்டை வேடத்தில்…

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு விஜய்க்கு சினேகாவும், மற்றொரு விஜய்க்கு மீனாட்சி செளத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், விடிவி கணேஷ், சுதீப், கஞ்சா கருப்பு, வைபவ், அஜ்மல், ரம்யாகிருஷ்ணன், கனிகா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

நடிகர் விஜய் இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்து ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம்…

தனது 69 வது படத்தை தொடர்ந்து, நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழக வெற்றிக்கழகம் தலைவராக, தமிழக அரசியலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருக்கிறார்.

இப்போது விஜய் நடித்து வரும் GOAT படத்துக்கு முன்பு வெளியான லியோ படம், விஜய்க்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும், விமர்சன ரீதியாக அது மாபெரும் தோல்வி படமாகவே இருந்தது என்றால் அது மிகையல்ல.

அதுவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் இரட்டை பிறவி, நரபலி, கிளைமாக்ஸில் 300 பேரை அடித்து வீழ்த்தும் விஜய் ஆக்சன் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு செம கடுப்பை ஏற்படுத்தியது.

கடுப்பேற்றிய முத்தக்காட்சி…

அதுமட்டுமின்றி டிரெய்லரில் வெளியான அந்த கெட்ட வார்த்தை, சோகமான ஒரு காட்சியில் திரிஷா – விஜய் உதட்டு முத்தக் காட்சிகள் எல்லாம் படத்துக்கு அவசியமற்றதாக இருந்து, ரசிகர்களை வெறுப்பேற்றியது.

அதனால் இந்த GOAT படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக தர வேண்டும் என்ற திட்டத்தில் வெங்கட்பிரபு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

இவானா

இந்நிலையில் விஜய்க்கு இந்த படத்தில் தங்கையாக நடிக்கும் கேரக்டர் நல்ல வெயிட்டான ரோல் ஆக உள்ளது. அந்த கேரக்டரில் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை இவானா.

லவ்டுடே நாயகியான இவர், முதலில் ஓகே சொல்லிவிட்டு பின்பு மறுத்து விட்டார். ஏனெனில் விஜய்க்கு தங்கையாக நடித்து விட்டால், பிறகு அதுபோன்ற கேரக்டர்களே வரும் என்பதால். ஏனெனில் அவர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் தொடர விரும்புகிறார்.

மாளவிகா ஷர்மா

அதன்பிறகு மாளவிகா ஷர்மா என்பவரை நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில் அவரும் விலகி விட்டார்.

அபியுக்தா

இந்நிலையில் அபியுக்தா என்ற விளம்பர மாடல் நடிகையை, விஜய்க்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

என்னப்பா சொல்றீங்க.. G.O.A.T படத்துல விஜய்க்கு தங்கச்சியாக நடிப்பது விளம்பர மாடல் நடிகை அபியுக்தாவா, அது வேற லெவலா இருக்குமே, என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version