நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக படத்தின் ரிசல்ட் என்னவென்றால் வெங்கட் பிரபு இயக்கிய படங்களிலேயே பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் இதுதான். மங்காத்தா படத்தை விடவும் ஒரு படி மேலே விறுவிறுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆனால், அதே சமயம் எதிர்மறையான கருத்துக்களையும் சிலவற்றையும் நம்மால் கேட்க முடிகிறது. அதாவது படத்தில் நிறைய முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கதாபாத்திரம் படம் முடிந்த பிறகு மனதில் நிற்கவில்லை.
என்ன காரணம் என்றால் படம் சுற்றி சுற்றி நடிகர் விஜயை சுற்றியே நகர்கிறது. அப்பா விஜய் மகன் விஜய் இளம் வயது விஜய் என நடிகர் விஜய் சுற்றி சுற்றி காட்சிகள் இருப்பதால் உடன் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரம் மனதில் ஒட்டவில்லை.
அவர்களுக்கு உண்டான ஸ்கிரீன் ஸ்பேஸ் குறைவாக இருக்கிறது. இன்னும் சில நேரங்களில் படத்தில் இவங்க எதுக்கு இருக்காங்க..? என்ற கேள்வியும் வந்து போகிறது. இதை கூட கதையின் ஓட்டத்தில் நம்மால் கடந்து செல்ல முடிகிறது.
ஆனால், படத்தில் நிறைய ரெஃபரன்ஸ் காட்சிகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்த ரெஃபரன்ஸ் காட்சிகள் படம் செல்ல செல்ல போதும்பா சாமி முடியல என்ற உணர்வை கொடுத்து விடுகிறது.
மேலும் படத்தின் நீளத்தை நிறையவே குறைத்திருக்கலாம். தேவையில்லாத அரை மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளை படம் பார்க்கும் ரசிகர்களே சுட்டி காட்டுகிறார்கள்.
அப்படி இருக்கும் பொழுது எதற்காக மூன்று மணி நேரம் இந்த படத்தை எடுத்து வைத்தார்கள் என தெரியவில்லை. இரண்டு மணி நேரம் இரண்டரை மணி நேரத்தில் முடியக்கூடிய காட்சிகள் கதை தான் இது என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.