விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இது குறித்து ஆவலுடன் காத்திருந்த நிலையில் வெளியான கோட் படத்தின் டிரைலர் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது.
முக்கியமாக ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இந்த ட்ரைலர் அமைந்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கோட் திரைப்படத்தின் பாடல்கள் போல இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் அதற்கு பதிலாக அதிகமான வரவேற்பை பெற்று இருக்கிறது.
GOAT ட்ரைலர்:
இந்த ட்ரைலர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களிலும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதையும் கூட இந்த ட்ரைலரிலேயே ஒரு வகையில் பூர்த்தி செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு.
பொதுவாகவே அரசியல் சார்ந்த விஷயங்களை பேசக்கூடியவர் வெங்கட் பிரபு. எனவே இந்த படத்தில் இன்னும் அதிகமாக அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ட்ரெய்லரை பொறுத்தவரை விஜய் முதன்முதலாக என்ட்ரி ஆகும்பொழுது உங்களை மீட் செய்ய போறது ஒரு புதிய லீடர் என்று வசனம் இருக்கிறது.
இதை கவனிச்சிருக்க மாட்டீங்க
இது அவரின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கான சில விஷயங்களையும் படத்தில் சேர்த்து இருக்கின்றனர். முக்கியமாக கில்லி திரைப்படத்தில் மருதமலை மாமணியே முருகையா என்கிற பாடலை விஜய் பாடுவது அனைவருக்கும் பிடித்த ஒரு காட்சியாக இருக்கும்.
இந்த திரைப்படத்திலும் அந்தப் படத்தில் அந்த காட்சியில் என்ன டி-ஷர்ட் போட்டிருந்தாரோ அதே டீ சர்ட் அணிந்து அந்த பாடலை பாடும் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது. இதுவும் ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வேற லெவல் வெறித்தனம்
முக்கியமாக இளம் வயது விஜய்யின் கதாபாத்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் என்று தெரிகிறது. அந்த கதாபாத்திரம் ஒரு சில காட்சிகளில் வயதான விஜய்யை காப்பாற்றுவது போல காட்சி இருக்கிறது. ஆனால் படத்தின் கதாநாயகன் அந்த வயதான விஜய் கதாபாத்திரம்தான் அந்த கதாபாத்திரத்திற்குதான் நடிகர் பிரசாந்த் பிரபுதேவா போன்றவர்கள் நண்பர்களாக இருக்கின்றனர்.
டி ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யின் கதாபாத்திரம் பாடல்கள் வெளியான பொழுது விமர்சனத்திற்கு உள்ளானாலும் படத்தில் அது ஒரு மாஸான கதாபாத்திரமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் படம் வெளியாகும் போது ஒரு உறுத்தலான விஷயமாக இந்த டி.ஏஜிங் இருக்காது என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.