விஜய் படத்தில் நடிக்க மறுக்க காரணம் இது தான்.. இவானா கூறிய பதிலை பாத்திங்களா..?

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (GOAT) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் 69 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

விஜய்

இந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழு நேர அரசியல்வாதியாக, விஜய் தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயலில் இறங்கப் போகிறார்.

GOAT படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைய இருப்பதால் அடுத்து ஏப்ரல் மாதத்தில் மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மதுரை மாநாட்டில்…

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சணக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் பங்கேற்கும் மதுரை மாநாட்டில் கட்சிக்கொடி, கட்சியின் கொள்கைகள், தீர்மானங்கள் குறித்து விஜய் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.

இந்த கட்சி மாநாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று, நடிகர் விஜய்க்கு தங்களது ஆதரவை நேரடியாக தெரிவிக்க உள்ளனர்.

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் GOAT படத்தில் அப்பா, மகன் என்ற இரட்டை ரோலில் நடிக்கிறார். இதில் சினேகா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

நட்சத்திர நடிகர்கள்

அவர்களை தவிர கனிகா, லைலா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ், வைபவ், அஜ்மல் என ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 13ம் தேதி திரைக்கு வரும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு, தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என்ற தகவலும் அடிபடுகிறது.

லவ்டுடே நாயகி

இந்நிலையில் GOAT படத்தில் விஜய் தங்கையாக முதலில் லவ்டுடே நாயகி இவானா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்ட நிலையில், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மகள் அபியுக்தா நடிக்கிறார்.

அபியுக்தா மாடலிங் துறையை சேர்ந்தவர். பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விஜய் படத்தில் இவானா நடிக்க மறுக்க காரணம் இதுதான் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இவானா கூறிய பதில் என்னவென்றால், நான் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றவள்.

தங்கை வேடத்தில்…

இப்போது தங்கை வேடத்தில் நடித்தால், அடுத்து அதுபோன்ற தங்கை கேரக்டர்களில் நடிக்கவே வாய்ப்பு வரும் என்றுதான் மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஹீரோயின் கேரக்டரில் நடிக்க வேண்டிய நேரத்தில், விஜய்க்கு தங்கையாக நடித்தால் தொடர்ந்து தங்கை கேரக்டரில் நடிக்க அழைப்பார்கள் என்றுதான், இவானா விஜய் படத்தில் நடிப்பதை நிராகரித்து இருக்கிறார். இதுவும் சரிதான் என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version