பார்ரா.. கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது..? பளபளன்னு ஆளே மாறிட்டாரே..!

2014-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளி வந்த திரைப்படம் தான் கோலி சோடா. இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்க சேரன் தயாரிப்பில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது.

மேலும் இந்த படத்தை அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கி இருக்கிறார்.

 

கோலி சோடா..

பசங்களை மையமாக வைத்து தமிழ் சினிமா ஒன்று வெளி வந்தது அந்த படத்திற்கு பசங்க என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்கள் தான் கோலி சோடா படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கான இசையை அருணகிரி அமைத்திருந்தார்.

மேலும் இந்த கோலி சோடா படத்தில் சோடா புட்டி கண்ணாடியோடு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை சீதாவின் தற்போதைய புகைப்படம் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படத்தில் நடிகை சீதா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். மேலும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் இந்த பட வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி நடித்திருந்தார்.

படத்தில் நடித்த சீதா வா…

மேலும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தனது நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட போது அனைவரும் இவரை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் உன் மூஞ்சிய எல்லாம் எப்படி செலக்ட் பண்ணினார்கள் என்ற ரீதியில் அவர் மனம் நோகும் படி பேசி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இருக்கும் அந்த சீதா கேரக்டருக்காக பல்வேறு ஆடிஷன்களை நடத்தியும் இயக்குனர் விஜய் மில்டன் திருப்தி ஆகவில்லை.

இந்நிலையில் தற்செயலாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சீதாவைப் பார்த்து அந்த கேரக்டருக்கு சரியான பெண் இவர் தான் என்பதை முடிவு செய்துவிட்டார்.

பளபளன்னு ஆளே மாறிட்டாங்க..

அத்தோடு சீதாவின் தோழி ஒருவர் மூலம் சீதாவை அணுகி நடிக்க சம்மதம் வாங்கி இந்த படத்தில் நடிக்க வைத்தது பற்றி பல பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள்.

கோலி சோடா திரைப்படமானது தற்போது சீதாவிற்கு நல்ல அடையாளத்தையும் அறிமுகத்தையும் தந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இவர் விக்ரம் மற்றும் சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

கோலி சோடா படத்தில் சோடா புட்டி கண்ணாடியுடன் ஒல்லியாக கருநிற தேகத்தோடு காட்சியளித்த சீதாவின் பட்டாசு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அத்தோடு கோலி சோடா படத்தில் நடித்த ஏடிஎம் தானா இது? என அனைவரையும் வாய்ப்பிளக்க வைக்க கூடிய அளவு பள பளவென்று ஆள் பலரையும் பக்காவாக கவர்ந்து ஈர்க்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ந்து போன ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து கோலி சோடா சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் பார்ரா கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது என்று உங்களுக்குள்ளும் சந்தேகம் ஏற்படும் அந்த அளவிற்கு பள பளவென்று ஆள் மாறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version