“சகல ஜென்ம தோஷத்தை நிவர்த்தியாக வேண்டுமா..!” – அதுக்கு கோமாதா பரிகாரம்..!!

கோமாதா பரிகாரம்: எண்ணம் போல் வாழ்வு என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது எண்ணம் நல்ல முறையில் இருக்கக்கூடிய பட்சத்தில் நமக்கு நடக்கும் பலன்களும் மிக நன்றாகவே இருக்கும். எனினும் நல்ல எண்ணம் இருந்தாலும் சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டே இருப்பார்கள்.

cow pooja

 இதற்கு என்ன காரணம் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் முற்பிறவியில் செய்ததைத்தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்ற கருத்து உங்களுக்கு புரிந்து விட்டால் அந்த ஜென்ம தோஷங்களை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்று உங்கள் மனம் ஆலோசனை செய்யும்.

நீங்கள் உங்கள் ஜென்ம தோஷங்களை நிவர்த்தி செய்ய உங்களது சகல துன்பங்களில் இருந்து விடுதலை பெற ஒரு அற்புதமான மார்க்கம் உள்ளது அது என்னவென்றால் நீங்கள் கோபமாதாவிற்கு இதனை தந்து வழிபட்டாலே போதும். எவ்வளவு பெரிய ஜென்ம தோஷம் இருந்தாலும் அது சரியாகும். அப்படிப்பட்ட கோமாதா பரிகார பூஜையை நீங்கள் எப்படி செய்யலாம் என்பது பற்றி விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

கோமாதா பரிகார பூஜை செய்யும் விதம்

cow pooja

கோமாதாவிற்கு பூஜை செய்வதற்கு உகந்த தினமாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. இந்த வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்திருந்தவுடன் தலைக்கு குளித்து உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த பொருட்களை உணவாகக் கொடுப்பதன் மூலம் ஜென்ம ஜென்மங்களாக நீங்கள் செய்து வந்த பாவங்கள் நீங்கும்.

மேலும் பசுவுக்கு அம்மவாசை, பௌர்ணமி நாட்களில் அகத்திக் கீரையை வாங்கிக் கொடுப்பதன் மூலமும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்திருந்த பாவங்களிலிருந்து விளக்கு பெற முடியும்.

cow pooja

அப்படி பசு மாடு உங்கள் வீட்டில் அருகில் இல்லை என்றால் ஒரு உண்டியலை வைத்து அது உங்களால் முடிந்த பணத்தை தினம் தோறும் போட்டு வாருங்கள் பிறகு அந்த உண்டியல் பணம் சேர்ந்த பிறகு ஏதேனும் ஒரு கோசாலைகளுக்கு சென்று அந்த பசுவுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்கும்படி கூறலாம்.

மேற்கூறியபடி நீங்கள் பசு மாட்டிற்கு உண்ணக்கூடிய பொருட்களை கொடுத்து உங்கள் பாவங்களை வெகுவாக குறைத்துக் கொள்ளலாம். எனவே உடனடியாக நீங்கள் முடிந்தவரை பசுவுக்கு இயன்றதை தானமாக கொடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …