Good Bad Ugly அஜித்திற்கு வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

தமிழ் திரை உலகில் தனது அசாத்திய உழைப்பால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித்தை ரசிகர்கள் அனைவரும் தல அஜித் என்று தான் அன்போடு அழைக்கிறார்கள்.

ஆரம்ப கால படங்களில் கடுமையான தோல்விகளை நடிகர் அஜித்குமார் சந்தித்த போதும் காதல் கோட்டை, வாலி போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்று அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

தல அஜித்..

வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்ற வகையில் தல அஜித் நடித்தாலும் அவரது படம் திரைக்கு வந்தால் மாஸ் கிட்டை கொடுக்க ரசிகர்கள் எப்போதும் ஆவலாக காத்திருப்பார்கள்.

இதையும் படிங்க: இதனால் தான் நானும் ஆண்ட்ரியாவும் பிரிஞ்சுட்டோம்.. அனிருத் பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

அந்த வகையில் தற்போது அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தீவிரமாக நடித்து வரும் தல அஜித் அடுத்த படம் பற்றியும் இவருக்கு வில்லனாக நடிக்க இருக்கும் நடிகர் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளி வந்துள்ளது.

Good Bad Ugly..

தற்போது விடா முயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் படு விரைவாக முடியக்கூடிய கட்டத்தை அடைந்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற சமயத்தில் இந்த படத்தை அடுத்து அஜித் 63 படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்க இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளி வந்துள்ளது. தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தல அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்க இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் இந்த படம் குறித்த ஆவல் அதிகரித்து உள்ளது.

யார் அந்த சென்சேஷனல் ஆன்ட்டி ஹீரோ..

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் அனிமல் படத்தில் வில்லன் ரோலில் நடித்த பாபி தியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் போன்றோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: வனிதா ஒரு **** குடும்ப மானத்தை வாங்குறா.. கொந்தளித்த நடிகர் அருண் விஜய்..!

அதுமட்டுமல்லாமல் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசிந்து வந்ததை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து பாடத்தை பார்க்க தற்போது ஆவலாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பரவி வைரலாக மாறி வருவதோடு அஜித் ரசிகைகள் இதை தெரிந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்தொடு படத்தின் அப்டேட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதால் இயந்த படம் விரைவில் வெற்றி படமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version