“நல்ல குடும்பத் தலைவன் – னாக இருக்க விருப்பமா?” – அப்ப இந்த கேரக்டர் இருக்கணும் பாஸ்..!

குடும்பத்தை சீறிய முறையில் வழிநடத்தக்கூடிய நபராக குடும்ப தலைவர்கள் இருப்பார்கள். அப்படி குடும்ப தலைவராக இருப்பவர்களுக்கு சில குணாதிசயங்கள் இருப்பது மிகவும் முக்கியமானது.

 இந்த குணங்களை அவர்கள் கொண்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தை பக்காவாக வழிநடத்த கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கும்.

மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் குடும்பத்தை பாதுகாக்கின்ற தனித்துவம் உடையவர்களாக அவர்கள் விளங்குவார்கள். அப்படிப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணாதிசியங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா.

தலைவரிடம் இருக்கவேண்டிய குணாதிசயங்கள்

குடும்பத் தலைவர் பணத்தை சேமிப்பவராக இருக்க வேண்டும். வருங்காலத்தின் பண தேவையை உணர்ந்து பிறரிடம் யாசிக்காத வண்ணம் பணத்தை சேமித்து வைப்பது குடும்ப தலைவனின் பொறுப்பாகும்.

அதுபோலவே வீட்டில் நிலவும் சூழ்நிலையை ஒழுங்காக கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். எனவே குழந்தைகளை ஒழுக்கத்தோடு பராமரிக்க கூடிய பணியை குடும்பத்தலைவன் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

குடும்பத் தலைவர்கள் எளிதில் யாரையும் நம்பக் கூடாது. எந்த வார்த்தைகளையும் நம்பி செயலில் இறங்கக்கூடாது. குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை நிலவினால் இரு தரப்பு நியாயங்களை கேட்டுத்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

செலவுகளை செய்வதற்கு முன்பு திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் குடும்ப பொருளாதார சீர்குலையும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.

எதிலும் சமயோஜித தன்மையோடும் எச்சரிக்கையோடு முடிவெடுக்க வேண்டும். ஒரு முறை யோசிப்பதற்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பதினால் குடும்பத்துக்கு நன்மையை ஏற்படும்.

தினமும் தங்களது குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களோடு நேரத்தை செலவிட சில நேரங்களை ஒதுக்குவது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் குடும்பத்தாரின் தேவைகளை உணர்ந்து நீங்கள் செயல்பட முடியும்.

குடும்பத்தில் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை பராமரிக்க உடன் பிறந்தவளுடன் சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் இது எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேற்கூறிய குணாதிசயங்கள் உங்களிடம் சற்று குறைவாக இருந்தால் இதை படித்த நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்களிடம் வளர்த்த முயற்சி செய்யுங்கள். நல்ல குடும்பத் தலைவராக இருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …