திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆன நிலையில்… குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லி…!!

 தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து அதன் பின் பல படங்களை இயக்கிய இயக்குனர் தான் இயக்குனர் அட்லி. தற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் வரிசையில் இருக்கும் இவர் பாலிவுட் படங்களையும் இயக்கி வருகிறார்.

இயக்குனர் அட்லி ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து சில படங்களை பண்ணி இருப்பதாக சில வதந்திகள் கிளம்பிய நிலையில்  அதைப் பற்றி எல்லாம் இவர் கவலை கொள்ளாமல் தன் பணியை கவனத்தோடு செய்து வருகிறார்.

 மேலும் இது போன்ற வதந்திகளுக்கு இவர் முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது ஏன் என்ற சில கேள்விகளையும் திரைத்துறையைச் சார்ந்தோர் கிளப்பி இருக்கிறார்கள்

 இவர் தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

 தற்போது இந்த படப்பிடிப்பானது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கக்கூடிய வேளையில் இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.

இயக்குனர் அட்லிக்கும் பிரியாவுக்கும் திருமணம் முடிந்து ஏறக்குறைய 8 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. எந்த நிலையில் தற்போது இவரது மனைவியான பிரியா கர்ப்பமாக இருப்பதாக அவர் செய்தி தெரிவித்திருப்பது தான்  மகிழ்ச்சியான செய்தியாகும்.

 இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்ட உடனேயே ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று இறைவனையும் இறைவனை பிரார்த்தித்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

 இதனை அடுத்து அட்லியும் தனது பதிவில் உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை என்று கூறி இருப்பது மிகப் பெரிய பரபரப்பையும் இன்ப அதிர்ச்சியும் தந்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து திரை உலகில் இருப்போரும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் குழந்தை நல்ல முறையில் ஆரோக்கியமாக பிறந்து தாயும், சேயும் நலமுடன் இருக்க இறைவனை அனுதினமும் பிரார்த்திக்க போவதாக கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …