நெல்லிக்காய் துவையல்

நீண்ட நாள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக உயிர் வாழ நெல்லிக்கனியை உண்பது மிகவும் அவசியமானது எந்த நெல்லிக்கனியை தான் அதியமான் அவ்வைக்கு வழங்கியதாக வரலாறு கூறுகிறது அப்படிப்பட்ட எந்த நெல்லிக்கனியில் என்ன சத்துக்கள் உள்ளது என்று பாருங்கள்.

நெல்லியில் உள்ள சத்துக்கள்

வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளது.

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்.

காலிக் அமிலமும் பாலிபீனாலும், 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து,கரோடினும் உள்ளது.

நெல்லிக்காய் துவையல் செய்ய தேவையானவை: 

பெரிய நெல்லிக்காய் – 6, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.  

செய்முறை: 

பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

இத்துவையலை உண்பதால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தச் சோகையை நீக்கி, சிவப்பணுக்களை அதிகரிக்கும். இருமல், ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் நோய்களை நீக்கும். வாய் துர்நாற்றத்தை தடுத்து, பற்களை உறுதியாக்கும்.

மேலும் உடல் பலகீனம், இருதயம், மூளையில் சோர்வு ஏற்பட்டால் உணவுடன் இத்துவையலை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. 

நெல்லிக்காயை ஊறவைத்த நீரால் கண்களைக் கழுவுவதாலும் ஊறவைத்த நீரைக் காலையில் பருகுவதாலும், கண் பார்வை தீர்க்கமடையும். மலச்சிக்கலும் நீங்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …