எல்லாம் பணம் படுத்தும் பாடு.. திமிர் காட்டும் திம்சு கட்ட நடிகை.. ஊருக்கு மட்டும் உபதேசம்..

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமான அந்த நடிகை, சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார். குறிப்பாக முன்னணி இளம் கதாநாயகர்களாக அப்போது இருந்த தல, தளபதி நடிகர்களுடன் அவர் நிறைய படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக உலக நாயகன் முதல் உள்ளூர் நாயகன் வரை நிறைய படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

திம்சு கட்ட நடிகை

இந்நிலையில் திம்சு கட்ட நடிகையாக மாறிய அவர், பிரபல சீனியர் நடிகரின் மகனுடன் சில படங்களில் ஒன்றாக நடித்த போது, காதல் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில், சுட்டெரிக்கும் பெயர் கொண்ட அந்த நாயகனுக்கு மனைவியானார்.

முதலில் அவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்த சீனியர் நடிகர், மகனின் விருப்பத்தை தவிர்க்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஒத்துக் கொண்டார். ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக மாமனாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி நடப்பது போல் பில்டப் செய்து கொண்டிருந்த அந்த திம்சு கட்ட நடிகை, திருமணமாகி குழந்தைகளுக்கு தாயான பின்பு, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

மாமனார் போட்ட ஆர்டர்

என் வீட்டு மருமகளான பின்பு, அவரை திரையில் மற்ற நடிகர்களுடன் நெருக்கமான பாடல் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் காண விரும்பாத அந்த சீனியர் நடிகர் மாமனார், திம்சு கட்ட நடிகையை நடிக்க வேண்டாம் என்று ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டார்.

சென்னையில் இருக்கும் வரை இந்த மாமனார் நடிகர், சினிமாவில் நடிக்க விட மாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட அந்த திம்சு கட்ட நடிகை, தன் பெற்றோர் பெயரைச் சொல்லி கடற்கரை நகரத்தில் தன் குடும்பத்துடன் சென்று ஐக்கியமானார்.

மீண்டும் சினிமாவில்

மனைவி சொல்லே மந்திரம் என்று மயங்கி கிடக்கும் கணவரும், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க சம்மதித்து விட்டார். நினைத்ததை சாதித்து விட்ட இறுமாப்புடன் திம்சு கட்ட நடிகை, இப்போது விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் கடற்கரை நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வீட்டில் வயதான மாமனார் மாமியார் இருக்க, தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு கடற்கரை நகரத்திற்கு பறந்து விட்டார் அந்த திம்சு கட்ட நடிகை.

பெரிய இடத்து வாரிசுகள்

தற்போது உடல்நலம் குன்றி இருக்கும் என்னுடைய மாமனார் மாமியாரை செவிலியர் ஒருவரை வைத்து பராமரித்து வருகிறார்கள் பெரிய இடத்து வாரிசுகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்தமும் சதையுமாக பழகும் மருமகள்கள் இருக்க, பெரும் பணத்திற்காக வேலை செய்யும் செவிலியர் என்ன பராமரிப்பு கொடுத்து விடப் போகிறார் என்ன அன்பை கொடுத்து விடப் போகிறார், எல்லாம் பணம் படுத்தும் பாடு போகும் போது பணத்தை கூடவா எடுத்துச் செல்ல போகிறார்கள். இப்படி வயதான காலத்தில் பெரியவர்களுக்கு உதவி செய்யாமல், மீண்டும் பணத்தை சேர்க்க ஓடிக் கொண்டிருக்கும் திம்சு கட்ட நடிகையை பார்த்து தலையில் அடித்து கொள்கிறார்கள் உறவினர்கள்.

240 கோடி ரூபாய் வீடு

மறுபக்கம் தன்னுடைய தாயை பராமரிக்கிறேன் பேர்வழி என்று தன்னுடைய சொந்த ஊரான கடற்கரை நகரத்தில் டேரா போட்டு இருக்கும் நடிகை தன்னுடைய தாய் வீட்டு பக்கமே செல்வதில்லையாம்.

பிரபலங்கள் வசிக்கக்கூடிய பகுதியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கிக் கொண்டு தனியாக பப்.. பார்ட்டி.. இரவு விருந்து என பொழுதை கழித்து வருகிறாராம்.

ஊருக்குதான் உபதேசம்

இப்படி பிறந்த வீடு புகுந்த வீடு என இரண்டுக்குமே உண்மையாக இல்லாத இந்த திம்சுகட்ட நடிகை ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கிளம்பி விடுகிறார் என்று உதட்டை பிதுக்குகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version