ரகசிய குடும்பம் நடத்திய கவுண்டமணி..செந்தில் கவுண்டமணி மோதல் பின்னணி.. 40 வயதுக்கு மேல் கிடைத்த விஷயம்!!..

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியன்களில் ஒருவராக திகழ்ந்த கவுண்டமணி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கு இந்த பெயரை சூட்டியது பாக்யராஜ் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

கவுண்டமணி செந்தில் இணைந்து நடித்த படங்களில் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைக்கக் கூடிய வகையில் இருக்கும்.

ரகசிய குடும்பம் நடத்திய கவுண்டமணி..

இந்நிலையில் அன்று கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த போது அவர்களோடு இணைந்து பல நடிகைகளும் காமெடி ரோலில் நடித்திருக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட ஒரு நடிகையுடன் கவுண்டமணி ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்று கிசுகிசுக்கள் எழுந்தது.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை ஷர்மிலி என்று சொல்லப்பட்டு வந்ததை அடுத்து கவுண்டமணி இதற்கான பதிலை எந்த ஒரு இடத்திலும் தரவில்லை. மேலும் இது குறித்து அவர் எந்த விதத்திலும் தன்னுடைய கருத்துக்களை வெளியிடாமல் இருந்தார்.

இந்த கிசுகிசுக்கள் கூட அவர் சினிமாவில் வேகமாக வளர்ந்து வர காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம். எனவே தான் அந்த கிசுகிசுகளுக்கு பதில் அளிக்காமல் அவர் இருந்திருக்கிறார்.

செந்தில் கவுண்டமணி மோதல் பின்னணி..

இந்நிலையில் செந்தில் கவுண்டமணி இணைந்து நடித்த படங்களில் குறிப்பாக கரகாட்டக்காரனின் வாழைப்பழத்தின் உங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கலாம். இது போன்ற அதிரடி காமெடிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

எனினும் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து செந்திலோடு இணைந்து நடிக்காமல் தனித்து நடிக்க ஆரம்பித்தார் காமெடி நடிகர் கவுண்டமணி.

அப்படி என்ன பெரிய மோதல் ஏற்பட்டது என்று நீங்கள் நினைக்கலாம். தன்னோடு இணைந்து நடித்த செந்தில் தன்னை ஒருமையில் அவன், இவன் என்று அழைத்துப் பேசியதை அடுத்து மனதுக்குள் கஷ்டம் ஏற்பட்டதால் அவரை விட்டு விலகி நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இவர் இன்றிருக்கும் காமெடி நடிகர்கள் எப்படி ஹீரோக்களாக நடித்தார்களோ அது போல் அன்றே ஹீரோவாக சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் தான் செய்த தவறை செந்தில் உணர்ந்து கொண்ட பிறகு கவுண்டமணியோடு செந்தில் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்திருக்கிறார்கள்.

40 வயதுக்கு மேல் கிடைத்த விஷயம்..

இந்நிலையில் 40 வயதுக்கு மேல் கவுண்டமணிக்கு பல பட வாய்ப்புகள் அதிகளவு கிடைத்து நம்பர் ஒன் காமெடியன் என்ற இடத்தை இன்று வரை தக்க வைத்துக்கொண்டு அந்த இடத்தில் இன்று வரை எந்த ஒரு நடிகராலும் நிரப்ப முடியாத அளவிற்கு நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்று புகழை அடைந்திருக்கிறார்.

 

தற்போது 60 வயதை கடந்து விட்ட நிலையிலும் இவருக்கு அற்புதமான வாய்ப்பு வந்திருப்பதாக செய்யாறு பாலு சொல்லியிருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கு காரணம் விரைவில் கவுண்டமணி சிவகார்த்திகேயனோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அந்த படத்தை காண்பதற்கு ஆவலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது அது பற்றி கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version