தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் அவர்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடிப்பது எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும்.. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கலாய்த்து தள்ளி விடுவார் நடிகர் கவுண்டமணி.
இதன் காரணமாகவே ஆரம்ப காலத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர்கள் வளர்ந்த பிறகு நடிகர் கவுண்டமணி தங்களை அவன்… இவன்.. என ஒருமையில் பேசுவது நெருடலாக இருக்கிறது என்ற காரணத்தினால் இவரை படத்தில் இருந்து விலக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.அப்படியே தங்கள் படத்தில் நடித்தாலும் காம்பினேஷன் ஷாட் வேணாம் என்று ஒதுக்க தொடங்கினார்கள்.
இப்படித்தான் இவருடைய மார்க்கெட் மெதுமெதுவாக சரிவை நோக்கி சென்றது. ஒரு காலத்தில் திரைப்படங்களை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் படத்தில் கவுண்டமணி செந்தில் இருக்கிறார்களா..? என்று கேட்டுவிட்டு தான் படத்தை வாங்குவார்கள்.
அந்த அளவுக்கு கவுண்டமணி செந்தில் காமெடி என்பது ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் காரணமாக நடிகர் செந்தில் ஒரு முறை கவுண்டமணி இடம் நான் உங்களுடன் இருப்பதால்தான் உங்களால் காமெடியில் ஜெயிக்க முடிகிறது.. நான் இல்லை என்றால்.. நீங்கள் இல்லை என்று பேச்சுவாக்கில் பேசியிருக்கிறார்.
இதனால் நிஜமாகவே கடுப்பாகி இருக்கிறார் கவுண்டமணி. இதனை மனதில் வைத்துக்கொண்ட கவுண்டமணி செந்தில் இடம் அப்போதைக்கு எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்திருக்கிறார்.
செந்திலின் இந்த பேச்சு கவுண்டமணியை சீண்டி விட்டது. எனவே, தனியாகவே நிறைய திரைப்படங்களில் நடித்து கலக்கினார் கவுண்டமணி. அப்போதும் கவுண்டமணிக்கு படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
ஆனால், நடிகர் செந்தில் மார்க்கெட் குறைய தொடங்கியது. நிலைமையை உணர்ந்து கொண்ட செந்தில் கவுண்டமணியிடம் சென்று.. அண்ணே நான் உங்களிடம் அப்படி கூறியது ரொம்ப தப்பு என்று மன்னித்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்போது செந்தில் இடம் எந்த ஒரு கோபமும் காட்டாமல் அப்படியாடா.. வா.. என்று தொடர்ந்து தன்னுடைய படங்களில் சேர்ந்து நடிக்க வைத்திருக்கிறார் கவுண்டமணி.
கவுண்டமணி கலகலப்பான ஆள் என்றாலும் கூட அவருக்கு தன்மானம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்பது உண்மை.
இப்படி இருந்த இவர் ஒரு கட்டத்தில் பிரபல நடிகையுடன் ரகசியமாக குடும்பம் நடத்தினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
நடிகை சர்மிலியுடன் கவுண்டமணி ரகசியமாக குடும்பம் நடத்தினார் என்று கூறப்பட்டது. பல்வேறு திரைப்படங்களில் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக ஷர்மிலி நடித்து இருக்கிறார். ஆனால், இந்த செய்தி எல்லாம் கிசுகிசு வடிவில் வந்தது.
அந்த காலத்தில் எல்லாம் நேரடியாக நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு எழுத மாட்டார்கள். எனவே கவுண்டமணி இது குறித்து கவலைப்படுவது கிடையாது. கிசுகிசு தானே எழுதுகிறார்கள்.
நேரடியாக எழுதினால் பதில் சொல்லலாம் கிசு கிசுவுக்கு என்ன பதில் சொல்வது என அவரும் விட்டுவிட்டார்.
இப்படியான கிசுகிசுக்கள் கவுண்டமணியின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்தன. பல்வேறு நடிகைகளுடன் நடிகர் கவுண்டமணி தொடர்பில் இருந்தார் என கூறப்பட்டது.
ஆனால், இது எதையுமே நடிகர் கவுண்டமணி தன்னுடைய தலைக்கு ஏற்றிக்கொண்டது கிடையாது. வெற்றி, தோல்வி, வசதி வாய்ப்புகள் எதுவுமே கவுண்டமணியை எந்த விதத்திலும் மாற்றியது கிடையாது.
அவர் அவராகவே தற்போது வரை இருக்கிறார் என கூறியிருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யார் பாலு.