நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. எப்போ என்ன பண்ணுவான்னே தெரியாது.. “கவுண்டமணி” குறித்து பாக்யராஜ்

தமிழ் திரை உலகில் காமெடியில் கலக்கிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் நடிகர் கவுண்டமணியை யாராலும் எப்போதும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடியனாக திகழ்ந்திருக்கிறார்.

இவரும் நடிகர் செந்திலும் இணைந்து காமெடி செய்தார்கள் என்றால் அந்த காமெடி ஒவ்வொரு மக்களையும் சிரிக்க வைக்க கூடிய வகையில் இருக்கும்.

நடிகர் கவுண்டமணி..

நடிகர் கவுண்டமணி திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்ல குண்டபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்திருக்க கூடிய இவர் அதிக அளவு கவுண்டர் செய்து வசனங்களை பேசியதால் இவரை நாடகத் துறையைச் சார்ந்த சக நடிகர்கள் கவுண்டர் மணி என்று அழைத்தார்கள்.

ஆனால் கவுண்டமணி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின் 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இவரது பெயரையே டைட்டில் பயன்படுத்த வைத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ் அந்த படத்தில் இருந்து தான் இவரது பெயர் கவுண்டமணி என்று மாறியது.

இவர் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் படங்களில் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

தப்பு பண்ணியது பாக்கியராஜ்..

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன், நாட்டாமை, முறைமாமன், சூரியன் போன்ற படங்கள் இன்றளவும் ரசிக்கக் கூடிய வகையில் இவரது காமெடிகள் உள்ளது என்று கூறலாம்.

இவர் பேசிய வசனங்களில் பெட்ரமாஸ் லைட் தான் வேணுமா.. நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா.. சொறி புடிச்ச மொன்ன நாயி.. டேய் தகப்பா.. அட பிஞ்சு போன தலையா போன்ற டயலாக்குகள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசக்கூடிய டயலாக் ஆக உள்ளது.

கரகாட்டக்காரனில் வரும் வாழைப்பழ நகைச்சுவை எத்தனை தலைமுறை ஆனாலும் சலிப்பே ஏற்படுத்தாத வகையில் வயிறு குலுங்க அனைவரையும் சிரிக்க வைக்கும்.

இதுதானா விஷயம்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பாக்கியராஜ் பேசும் போது தான் செய்த தவறு தான் கவுண்டர் மணியை கவுண்டமணி என்று மாற்றியது என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து நான் தான் தப்பு பண்ணிட்டேன் கவுண்டர் மணியை கவுண்டமணின்னு முதல் முதல்ல எழுதி கொடுத்து கடைசில கவுண்டமணியே அவருக்கு நிலையான பெரா அமைஞ்சிருச்சு என்று பாக்கியராஜ் கூறிய பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்து ரசிகர்கள் அனைவரும் அட பெயருக்குள்ள இவ்வளவு ரகசியம் இருக்கா? என்று கேட்டதோடு அவ்வளவு சிறப்பாக நாடகங்களில் இவர் கவுண்டர் கொடுப்பாரா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இவர் மீண்டும் திரையில் நடிக்க வேண்டும் அதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். எனவே இப்போது உங்களுக்கு கவுண்டர் மணி எப்படி கவுண்டமணி ஆனார் என்பது தெளிவாக புரிந்திருக்கும்.

இதனை அடுத்து கவுண்டர் மணி எப்படி கவுண்டமணி ஆனார் என்ற விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்வதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி இணையத்தில் கவுண்டமணியின் ரசிகர்கள் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version