ஒரு ஹிட் படத்தில் நடித்தாலே, இப்போதெல்லாம் சிலருக்கு கொம்பு முளைத்து விடுகிறதோ என்றுதான் சில நேரங்களில் பலருக்கும் தோன்றுகிறது.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96 இந்த படம் பலரது பள்ளி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு காலகட்ட கதையாக இருந்ததால் வெகு எளிதாக வெற்றி பெற்றது.
அதிலும் குறிப்பாக திரிஷாவின் நடிப்பும், விஜய் சேதுபதியின் அப்பாவித்தனமான நடிப்பும் படத்துக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
இந்த படத்தில், அவர்களது பள்ளி வாழ்க்கை காலகட்ட காட்சிகளை காட்டும்போது அதில் திரிஷாவாக, ஜானு கேரக்டரில் நடித்தவர் தான் கெளரி கிஷன்.
தமிழில் அதற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. எனினும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார்.
அதனால் தனது எக்கச்சக்க கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளபக்கங்களில் பதிவேற்றம் செய்து அதன்மூலம் வாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்.
இந்த சூழலில், கெளரி கிஷன் ஓரினச்சேர்க்கை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்களை வேறுபடுத்தி பார்க்க கூடாது என்ற புதிய சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஓரினச்சேர்க்கையாளர்களை அன்னியமாக பார்க்கும் போக்கு தற்பொழுது சமூகத்தில் இருக்கிறது ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களாக அவர்களும் நம்மை போன்ற உணர்வு உடையவர்கள் தான்.
ஆனால் அவர்கள் தன் பாலினம் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் அதற்காக அவர்களை வெறுக்க வேண்டும்,தனிமைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஓரினச்சேர்க்கையாளர்களையும் சாதாரணமாக பார்க்கக்கூடிய மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும் என பேசி இருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.
அதாவது ஓரினச் சேர்க்கை என்பது மற்றவர்கள் பார்வையில் மிக சாதாரணமானதாக, இயல்பானதாக இருக்க வேண்டும் என வெளிப்படையாக சொல்லி, அதிர்ச்சி தந்திருக்கிறார் கௌரி கிஷன்.