வாரணம் ஆயிரம் படத்திலிருந்து அசின் வெளியேற காரணம் இது தான்..! ரகசியம் உடைத்த கௌதம் மேனன்..!

இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சூரியா, சிம்ரன், சமீரா ரெட்டி, குத்து ரம்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம்.

இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சிம்ரன்.

இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் இளவட்டங்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. இந்த படத்தில் நடிகை சமீரா ரெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பு நடிகை அசின் தான் ஹீரோயினாக நடித்து வந்தார்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி விசாகப்பட்டினத்தில் இதற்காக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தை முதலில் தயாரித்த தயாரிப்பாளருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த படத்தை ட்ராப் செய்யும் அளவுக்கு சென்று விட்டது.

அதன் பிறகு கதையில் சில மாற்றங்களை செய்து வேறு தயாரிப்பாளரின் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கினார் கௌதம் வாசுமேனன். ஆனால் அப்போது நடிகை அசினின் கால்ஷீட் கிடைக்காததால் சமீரா ரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.

இந்த நிலையில் வாரணமாயிரம் படத்தில் நடிகை அசின் நடித்திருந்த காட்சிகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் சமீரா ரெட்டிக்கு பதிலாக அசின் நடித்திருந்தால் திரைப்படம் இன்னுமே நன்றாக இருந்திருக்கும் என தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதே நேரம் நடிகை சமீரா ரெட்டியும் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *