பிக் பாஸ் சீசன் ஆறு அறிவிப்பு வந்த உடனேயே ஜிபி முத்து தான் இந்த பட்டத்தை வெல்வார் என்று அனைவரும் பரவலாக பேசி வந்தார்கள்.
அடுத்து ஒரு வாரமாக விபி முத்துவும் பிக்பாஸ் வீட்டை மிகவும் கலகலப்பாக வைத்துக் கொண்டதோடு அவரின் வெள்ளந்தி தனமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
இதனை அடுத்து கட்டாயமாக பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து முத்து சாதனை புரிவார் என்று இவரது ஃபாலோயர்கள் அனைவரும் நினைத்தார்கள்.
ஆனால் அனைவரின் நினைப்புகளுக்கும் எதிராக இவரது செயல் அமைந்துவிட்டதால் அனைவரும் தற்போது வருத்தத்தில் இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறானது.
புகழ் ,காசு இரண்டையும் துச்சமென மதித்து உலகநாயகன் கூறிய அறிவுரைகளையும் இவர் ஏற்றுக் கொள்ளாமல் தனது பாசமான மகன் தான் தனக்கு பெரிது என்று பிக்பாஸ் 6-ம் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதால் இவரின் மதிப்பு பன்மடங்காக பெருகி விட்டது என்று கூறலாம்.
மேலும் எதற்கும் மயங்காத ஜிபி முத்துவின் என்ற துணிச்சலான செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சீனுராமசாமி ஜிபி முத்துவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளர் அவன் வருமானம் மற்றும் வெகுமானம் எல்லாவற்றையும் பணிவோடு வேண்டாமென்று துறந்து தன் மகனுக்காக வெளியேறி இருப்பதை பார்க்கும்போது இவர் மிகச் சிறந்த தமிழ் மகன் என்று இவருக்கு அடைமொழி கொடுத்திருக்கிறார்.
மேலும் இந்த தீபாவளியின் வெற்றி நாயகன் ஜிபி முத்து தான். இவர் புகழ் பன்மடங்கு இனி பரவி வரும் என்றும் மேலும் உயர்வார் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் எல்லோரும் காசுக்கவும் புகழுக்காகவும் அடிபணியாத மனிதர் என்றால் இவரை சுட்டிக் காட்டலாம் என்று மனதளவில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.