டிக் டாக் இல் இருந்து பிக் பாஸ்க்கு சென்று… பிக் பாஸில் இருந்து மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஜி பி முத்துவின் அசுர வளர்ச்சி…!

 டிக் டாக்கில் முதலில் பிரபலமாக பேசப்பட்டு இருந்த ஜி பி முத்து தற்போது தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பேசப்படக்கூடிய ஒருவராகிவிட்டார். இதனை உறுதி செய்யும் வகையில் whatsappல் கூட இவருக்கான ஸ்டிக்கர் ஆப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

 டிக் டாக் தடைசெய்த பின்னால் இவர் youtube மூலம் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தார். ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்த இவருக்கு அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் தற்போது மிகப்பெரிய லக்கடித்து பெரிய நிலைக்கு சென்று விட்டார் என்று கூறலாம்.

 அந்த வரிசையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் இணைந்து உருவாகும் படத்தில் ஜிபி முத்துவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வந்துள்ளது.

இதுவரை மிகச் சின்ன பட்ஜெட்டில் நடித்து வந்த gb முத்துவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகவும் அசுர வளர்ச்சியை தரக்கூடிய டிரம்காடாகவும் இருக்கும்.

இது மட்டுமல்லாமல் இவர் அரசியல் தளத்திலும் ஒரு பக்கம் ட்ரெண்டிங் ஆகி இருந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது ஜிபி முத்து என் தாத்தா, என் அப்பா, என் அம்மா என்று என் பரம்பரையை அதிமுக தான் எனக்கு முன்னால் முதல்வர் ஜெயலலிதா அம்மாவை ரொம்பவும் பிடிக்கும் இவர் இரும்பு பெண்மணி இவர் இறந்தபோது என் வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்ற எண்ணத்தில் நான் அழுதேன் என்று பேசி இருந்தார்.

 அந்த வீடியோவை தான் தற்போது அதிமுக தொண்டர்கள் வைரல் செய்து வருகிறார்கள். இதனை அடுத்து ஜிபி முத்துவின் களம் அரசியல் மற்றும் சினிமா என்ற இரண்டு கோணங்களில் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனச் சிதறலை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் இந்த நிகழ்வினை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஜிபி முத்துவின் வளர்ச்சியை பாட்டு சோசியல் மீடியாக்களில் கொண்டாடி வருகிறார்கள் என்று கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam